ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 25.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Share
Rasi Palan new cmp 13 scaled
Share

​இன்றைய ராசி பலன் 25.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் பிசியான நாளாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்க மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய நாள். எதிர்காலம் குறித்து அதிகமாக யோசிப்பீர்கள். அரசு வேலையில் விதிமுறைகளை கடைப்பிடித்து முழு கவனத்துடன் செயல்படவும். இன்று முக்கிய பணிகளை சரியாக திட்டமிட்டு செயல்பட்டால் நல்ல வெற்றி கிடைக்கும். உங்கள் வேலையில், உடன் பிறந்தவர்கள் உறுதுணையுடன் இருப்பார்கள்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபார ரீதியாக மிகவும் நல்ல நாளாக இருக்கும். உங்கள் வியாபாரத்தில் நல்ல லாபத்தையும், புதிய உயரத்தையும் தொட முடியும். சொத்து வாங்கும் ஆசை நிறைவேறும். பணியிடத்தில் உடன் பணியை புரிபவர்களை, உங்கள் திறமையால் ஈர்க்க முடியும். மாணவர்கள் படிப்பு விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். என்று எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று எந்த ஒரு வேலையிலும் அலட்சியமாகச் செயல்பட வேண்டாம். தெரியாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். கடின உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். அதன் மூலம் வேளையில் வெற்றி அடைவீர்கள். மாணவர்கள் படிப்பு சார்ந்த விஷயத்தில் சுமையிலிருந்து இருந்து விடுபடுவீர்கள். இன்று யாரிடமும் கடன் வாங்க கூடாது.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மிகச் சிறப்பான நாளாக இருக்கும். புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி எதிரிகளை எளிதாக வெல்வீர்கள். நண்பர்களுடன் உல்லாச பயணம் செல்வீர்கள். இன்று உங்கள் பயணத்தில் கவனம் தேவை. வாழ்க்கை துணையுடன் மனக்கசப்பு ஏற்படும். உங்கள் தவறுகளுக்கு வருத்தப்படுவீர்கள். என்று வண்டி, வாகன பயன்பாட்டில் மிகவும் கவனம் தேவை.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று. வாழ்க்கைத் துணையின் ஆதரவும், ஆலோசனையும் உங்களுக்கு பயன் அளிக்கும். பொருள் வளம் பெருகும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள். உங்கள் பணிகள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோரின் ஆசீர்வாதம் கிடைக்கும். அதனால் எந்த ஒரு வேலையில மனதிருப்தி கிடைக்கும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். வேலையில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் ஒருவரிடம் இருந்து சில நல்ல செய்திகளை கேட்பீர்கள். என்ற மற்றவர்களின் வேலையில் தலையிட வேண்டாம். முதலீடு செய்வதில் கவனம் தேவை. இல்லையேல் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். என்று உங்கள் இலக்கை நோக்கி கடினமாக முயற்சி செய்ய அற்புதப் பலன் உண்டாகும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். செல்வாக்கு மிக்க நபர்களை சந்திப்பதும், அவர்களின் மூலம் சில நல்ல வாய்ப்புகள் பெறலாம். இன்று நீங்கள் யாரிடமாவது உதவி கேட்டால் அது எளிதில் கிடைக்கும். குழந்தைகள் வகையில் மகிழ்ச்சி உண்டாகும். என்று உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். கனவு நினைவாகும். குடும்பத்தில் தகராறுகள் தீரும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று ஆக்கபூர்வமான பணிகளை தொடங்குவீர்கள். என்று சில புதிய வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வணிகஸ்தர்களுக்கு சிறந்த நாளாக அமையும். பணியிடத்தில் நம்பிக்கையை பெறுவீர்கள். நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும். மாணவர்கள் படிப்பு சார்ந்த மனச்சுமையிலிருந்து விடுபடுவீர்கள். தொழில் சார்ந்த விஷயத்தில் கவலை ஏற்படும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று கவனமாகவும், எச்சரிக்கையுடன் முடிவுகளை எடுக்கவும். இன்று யாரிடமும் கடன் வாங்குவதை தவிர்க்கவும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அன்புக்குரியவர்களிடமிருந்து அன்பும், ஆதரவும் கிடைத்து மகிழ்ச்சி அடைவார்கள். பணத்தை சேமிக்க முடியும். குடும்ப விஷயத்தில் பொறுமையுடன் கையாளவும். சட்ட விஷயங்களில் நிதானமாக செயல்படவும்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் செல்வாக்கும், புகழும் உயரும்.பணம் தொடர்பான விஷயத்தில் சாதக பலனை பெறுவீர்கள்.வேலையைப் பற்றிய முக்கிய திட்டங்கள் தீட்டுவீர்கள். நண்பர்களுடன் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் கலந்து கொள்வீர்கள். பிறருக்கு அறிவுரை கூறுவதை தவிர்க்கவும் தவிர்க்கவும். குழந்தைகள் தொடர்பான விஷயத்தில் நற்பலன் பெறுவீர்கள்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு நல்ல சொத்துக்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். உங்கள் மூதாதையர் சொத்து தொடர்பான தகராறு நீங்கி , வெற்றி பெறலாம். வணிகர்கள் தங்கள் திட்டங்களை மீண்டும் தொடங்குவார்கள். மனம் மகிழ்ச்சியாக இருக்கும், பணியில் முன்னேற்றம் அடைவீர்கள். உங்கள் நல்ல சிந்தனையுடன் எந்த முடிவையும் எடுத்து வெற்றி பெறுவீர்கள். முக்கியமான வேலைகளை சரியான நேரத்தில் முடிப்பீர்கள்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் ஆளுமையும் மேம்படும். உங்களின் விருப்பங்கள் நிறைவேறி மகிழ்வீர்கள். நீங்கள் இலக்குகளை சிறப்பாக அடைவீர்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைப்பதால் உங்கள் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது.

Share
Related Articles
tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 06 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 6.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 செவ்வாய்க் கிழமை, சந்திரன் சிம்மம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 02 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 2.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 19, வியாழக் கிழமை, சந்திரன் மிதுனம்...