இன்றைய ராசிபலன் : 28 அக்டோபர் 2024 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் 28.10.2024 குரோதி வருடம் ஐப்பசி 11, திங்கட் கிழமை, சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உள்ள சேர்ந்த திருவோணம், அவிட்டம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீக பணிகளில் ஈடுபடுவீர்கள். அன்றாட பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் வேலை மற்றும் வியாபாரம் தொடர்பாக சிறப்பான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். இன்று பணியிடத்தில் பிறருடன் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சை கட்டுப்படுத்தவும். குடும்ப உறுப்பினர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும். ஆரோக்கியத்தில் ஸ்திரத தன்மை இருக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உடல் நலப் பிரச்சனை சந்திக்க நேரிடும். இன்று தேவையற்ற மன உளைச்சல் ஏற்படும். வியாபாரம் தொடர்பாக சில நல்ல செய்திகள் தேடி வரும். இன்று உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யவும். இன்று உங்கள் குடும்ப உறவில் தேவையற்ற பதற்றம் ஏற்படும். கடுமையான வார்த்தைகளையும், பயணங்களையும் தவிர்ப்பது நல்லது.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பரபரப்பான நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். இருப்பினும் இன்று கடின உழைப்பு தேவைப்படும். தொழிலதிபர்கள் சில ஏமாற்றங்களை சந்திக்க வாய்ப்புள்ளது. பெண்கள் தங்களின் வேலை மற்றும் குடும்பத்தை கவனிப்பதில் சிரமங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் கடினமான உழைப்பு, பொறுப்பும் தேவைப்படும். இன்று உடல் நலனில் பிரச்சினை ஏற்படும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று கவனக்குறைவு அதிகரிக்கும். உங்கள் செயல்பாட்டில் சரியான திட்டமிடலுடன் செயல்படுவது நல்லது. இன்று உங்கள் விருப்பத்தை விட குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் கடின உழைப்பால் சிறப்பான முன்னேற்றத்தை அடைவீர்கள். இன்று அவசரப்பட்டு எந்த ஒரு பண பரிவர்த்தனைகளிலும் ஈடுபடுவதையும், வாக்குறுதிகளை கொடுப்பதையும் தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் புத்துணர்ச்சி இருக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று எந்த செயலிலும் கூடுதல் கவனம் தேவை. இன்று அன்புக்குரியவர்கள் உங்களை விட்டு விலக வாய்ப்புள்ளது. வழக்கத்தை விட எதிலும் திட்டமிட்டு செயல்படுவதும், விவேகமாகவும் செயல்படுவது நல்லது. எதிர்பாலினத்தவர்களிடம் பேசும் போது கவனம் தேவை. இன்று பண ஆதாயம் சிறப்பாக கிடைக்கும். வருமானம் உண்டாகும். செலவை குறைக்க வேண்டும். இன்று உடல் நலம் பலவீனமாக உணர்வீர்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் செயலில் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதை தவிர்க்கவும். இன்று உணர்ச்சிவசப்படுவதையும், கோபத்தையும் தவிர்க்கவும். பணியிடத்தில் முழுமையான கவனத்துடன் செயல்படவும். இன்று கடன் கொடுப்பதையும், வாங்குவதையும் தவிர்க்கவும். வேலையில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் சந்திக்க வாய்ப்புள்ளது.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் செயல்பாடு திருப்தி அற்றதாக இருக்கும். சூழல் உங்களுக்கு சாதகமற்றதாக இருக்கும். உங்கள் வேலை, தொழிலில் தேவைக்கேற்ற லாபம் பெறுவீர்கள். வியாபாரத்தில் இதை தடைகள் மன உளைச்சலை ஏற்படுத்தும். இன்று உங்களின் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. இலக்கை அடைய கடின உழைப்பு தேவைப்படும்.சில விஷயங்களை நினைத்து குற்ற உணர்வு ஏற்படும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று கடின உழைப்பிற்கான பலனை பெறுவீர்கள். நாளில் முதல் பகுதி நிம்மதியாகவும், பிற்பகுதியில் அலைச்சலும் ஏற்படும். இன்று தேவையற்ற செயல்களில் நேரத்தை செலவிடுவீர்கள். இன்று எந்த ஒரு முடிவையும் நிதானமாக எடுக்கவும். பணம் தொடர்பான பிரச்சனைகளில் சிக்கி கொள்வீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று சுப நிகழ்ச்சிகளில் உற்சாகத்துடன் பங்கேற்பார்கள். உங்களின் சொந்த முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலையை முடிப்பதில் கவனம் தேவை. வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகும். அன்பானவர்களுடன் நேரத்தை செலவிட விரும்புவீர்கள்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று சூழல் கடினமானதாக இருக்கும். மாலை நேரத்தில் சற்று நிம்மதி அடைவீர்கள். நாளின் ஆரம்பத்தில் அலைச்சலும், ஓய்வற்ற சூழலும் இருக்கும். பண இழப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. வியாபாரம் தொடர்பாக எந்த ஒரு ரிஸ்க் எடுப்பது நல்லது. பணியிடத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். குடும்பத்தில் நிறைவேற்ற பிரச்சினை அல்லது திடீர் சோகமான சம்பவம் ஏற்படும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன் கிடைக்கக்கூடிய நாள். இன்று மகிழ்ச்சியும், அலைச்சலும் ஏற்படக்கூடிய நாள். தொழில், வியாபாரம் சம்பந்தமாக மந்தமான நிலை ஏற்படும். முதலீடு தொடர்பான விஷயங்களை தவிர்க்கவும். குடும்ப பொறுப்புகளை கவனமாக நிறைவேற்றவும். இன்று எதிலும் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதை தவிர்க்கவும். உடல் நலனில் அக்கறை தேவை.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று பயனற்ற செயல்களில் நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் இலக்குகளை அடைவதில் கவனம் தேவை. முக்கிய முடிவுகளை எடுப்பதிலும், செயல்களிலும் வீட்டின் மூத்தவர்களின் அறிவுரை பெறுவது நல்லது. வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் இருக்கும். இந்த அதிர்ஷ்டத்தின் உதவியால் லாப வாய்ப்புகள் அதிகரிக்கும். இன்று உங்கள் வேலையை தள்ளிப் போடுவதை தவிர்க்கவும்.
- 2023 rasi palan
- 2024 rasi palan
- daily rasi palan
- Featured
- indraya rasi palan
- nalaiya rasi palan
- pugazh media rasi palan
- raasi palan
- rasi palan
- rasi palan 2024
- rasi palan in tamil
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today tamil
- shelvi rasi palan
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- tamil rasi palan
- Today Rasi Palan
- today rasi palan in tamil
- Today Rasi Palan Tamil
- vidyadharan rasi palan