9 33
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் : 26 அக்டோபர் 2024 – Daily Horoscope

Share

இன்றைய ராசிபலன் : 26 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 26.10. 2024, குரோதி வருடம் ஐப்பசி 9, சனிக் கிழமை, சந்திரன் கடகம், சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள பூராடம், உத்திராடம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் நல்ல வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் வெற்றி அதிகரிக்கும். இன்று பொழுது போக்கு விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று வெற்றி அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் கௌரவம் உயரும். சக ஊழியர்களுடன் ஒத்துழைப்பு குறைவாக இருக்கும். அதனால் வேலை முடிய தாமதமாகும். இன்று அனைவரிடமும் அனுசரித்து செல்லவும். உங்களின் வருமானம் அதிகரிப்பதற்கான சாதகமான நாள். உங்களுக்கு விருப்பமான வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முக்கிய முடிவுகள், திட்டங்களில் பெரியவர்களின் வழிகாட்டுதலை பெறுவது நல்லது.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உணர்ச்சிவசப்படுவதையும், கோபப்படுவதையும் தவிர்க்க வேண்டிய நாள். பணியிடத்தில் அவசரத்தை காட்ட வேண்டாம். பண விவகாரத்தில் கவனம் தேவை. இன்று உங்களின் லாபம் குறையும். முக்கிய வேலை அல்லது முதலீடு சார்ந்த விஷயத்தில் அனுபவம் உள்ளவர்களிடம் கலந்தாலோசித்த பின்னரே செயல்படவும். இன்று உங்களின் குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் விரும்பாவிட்டாலும் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதங்களும் தேடி வரும். இன்று உங்கள் செயல் மற்றும் பேச்சில் மென்மையை கடைப்பிடிப்பது நல்லது. இன்று உங்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் அமையும். நிதிநிலை ரீதியாக சாதாரணமான நாளாக இருக்கும். இன்று உங்களின் செலவுகளை கட்டுப்படுத்தவும். உங்கள் வீட்டில் அல்லது உறவினர்களிடம் இருந்து சில சாதகமற்ற செய்திகள் தேடி வரும்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று மகிழ்ச்சியும், அமைதியும் அனுபவிப்பீர்கள். நாளில் முற்பகுதியில் உங்கள் வேலையில் சோம்பேறித்தனத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். லாபம் குறைய வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்கள் வேலையில் பணி சூழல் சாதகமாக இருக்கும். வீட்டு தேவைக்கான செலவுகள் அதிகரிக்கும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று திருப்தியான மனநிலை இருக்கும். உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. இலக்குகளை சரியாக முடித்து நற்பெயர் பெறலாம். இன்று மன ஆதாயத்திற்காக கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். இன்று உங்களின் வேலை தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். குடும்பத்திலும், பணியிடத்திலும் பிறரை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். இன்று திடீர் அலைச்சல் ஏற்படும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று கற்பனை உலகில் இருந்து, நிதர்சனத்திற்கு வருவது நல்லது. உங்களின் எண்ணங்களை பெரிதாக வைத்து செயல்படுவது நல்லது. நீங்க செய்யக்கூடிய தொழில் வேலைகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும். இன்று போட்டிகள் அதிகமாக இருந்தாலும் அதிக லாபம் சம்பாதிப்பீர்கள். குடும்பத்தில் தேவையற்ற பேச்சை தவிர்ப்பது நல்லது. இன்று வயதானவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமற்ற நாளாக இருக்கும். எந்த வேலையை செய்ய நினைத்தாலும் அதில் சில தடைகள் சந்திக்க நேரிடும். வியாபாரம் செய்யக்கூடியவர்கள் சிறிய தவறு கூட பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும். நீங்கள் செய்து முடித்த பழைய வேலைகள் மூலம் நற்பலனை பெறுவீர்கள். இன்று உங்கள் வார்த்தையில் நிதானம் தேவை. வதந்திகளை நம்ப வேண்டாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை வளரும். நிம்மதி கிடைக்கும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டம தினமாக அமைவதால் உங்கள் செயலில் கூடுதல் கவனம் தேவை. உங்கள் வீட்டு பொறுப்புகளை நிறைவேற்றுவதில் மும்முரமாக செயல்படுவீர்கள். உங்கள் வேலை, தொழிலில் நற்பலனைத் தரும். உங்களின் வருமானத்தை விட செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வேலை தொடர்பாக நல்ல செய்தி கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் உற்சாகமான சூழல் இருக்கும். கடினமான நேரத்தில் நண்பர்களின் உதவி கிடைக்கும். இன்று உங்கள் செயலில் சோம்பலுடன் இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று தேவையற்ற அலைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. பொருளாதார நிலை முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும். அதே சமயம் நீங்கள் விரும்பாவிட்டாலும் தேவையற்ற செலவுகள் ஏற்படும். இன்று குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று பரபரப்பான நாளாக இருக்கும். உங்களின் ஆசைகள் நிறைவேறாததால் ஏமாற்றம் அடைய வாய்ப்பு உள்ளது. இன்று ஆன்மீக ஸ்தலங்கள் செல்லுதல், வீட்டில் சுப காரியங்களில் ஈடுபடுதல் என மும்முரமாக இருப்பீர்கள். இன்று உங்களின் மன அமைதி அதிகரிக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் செயலில் நம்பிக்கையுடன் ஈடுபடவும். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். இன்று பணவரவு எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமற்ற சூழல் இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. உடல்நல பாதிப்பால் உங்கள் வேலையை முடிப்பதில் சிக்கல் ஏற்படும். இன்று தேவையற்ற பயணத்தை தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகன பயன்பாட்டில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். குடும்பத்தில் தவறான புரிதல்கள்நீங்கும்.

Share
தொடர்புடையது
MediaFile
ஜோதிடம்

இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 – புதன்கிழமை)

இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 – புதன்கிழமை) நாள் : விசுவாசுவ வருடம் வைகாசி தேய்பிறை மாதம்...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 27 மே 2025 : மன வலிமை அதிகரிக்கப்போகும் ராசிகள்

இன்றைய ராசிபலன் 27.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 13, செவ்வாய்க் கிழமை, சந்திரன் ரிஷப...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 26 மே 2025 : புகழ் பெற உள்ள ராசிகள்

இன்றைய ராசிபலன் 26.05.2025 விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 12, திங்கட் கிழமை, சந்திரன் ராசி...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 24 மே 2025 : சனி யோகத்தால் பதவி உயர்வு கிடைக்கும் ராசிகள்

இன்றைய ராசிபலன் 24.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 10, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...