ஜோதிடம்

இன்றைய ராசிபலன் : 13 அக்டோபர் 2024 – Daily Horoscope

Share
tamilnaadi 1 scaled
Share

இன்றைய ராசிபலன் : 13 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 13.10.2024, குரோதி வருடம் புரட்டாசி 27 ஞாயிற்று கிழமை, சந்திரன் மகரம், கும்பம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் உள்ள சேர்ந்த திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று முக்கிய வேலை தொடர்பாக பயணம் மேற்கொள்ள நேரிடும். அதில் சிறப்பான வெற்றி பெறுவீர்கள். உங்கள் வீடு வியாபாரம் தொடர்பான வேலையில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இணக்கமாகச் செயல்படவும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் பொருள் வசதியும், வளமும் பெருகும். புதிய சொத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளவர்களுக்கு நல்ல நாள். வீடு மற்றும் நிலம் வாங்கும் விருப்பங்கள் நிறைவேறும். இன்று உங்களின் வசதிகள் அதிகரிக்கும். அது தொடர்பான செலவும் அதிகரிக்கும். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறலாம்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் தொடர்பாக சில புதிய திட்டங்கள் வெற்றி பெறுவீர்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பை பெறுவீர்கள். இன்று. குடும்பத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் கடனிலிருந்து விடுபட வாய்ப்பு உண்டு. மாணவர்கள் தேர்வு தொடர்பான பயம் நீங்கும். படிப்பில் கடின உழைப்பு தேவைப்படும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் புகழ் அதிகரிக்கும். உங்கள் வேலை தொடர்பான திருப்தியான மனநிலை இருக்கும். பணியிடத்தில் கருத்து வேறுபாடுகளை தவிர்த்தால் வெற்றி உங்களுக்கு. உங்களுக்கு சாதகமான முடிவுகள் தேடி வரும். இன்று ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் உங்களின் பேச்சில் கவனம் தேவை.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக கூட்டாளிகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். இன்று வியாபாரம் தொடர்பாக எந்த முடிவை எடுத்தாலும் புத்திசாலித்தனம், விவேகத்துடனும் செயல்படவும். இன்று சில சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு உண்டு. காதல் வாழ்க்கையில் இணக்கமான சூழல் இருக்கும். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று புதிய வாகனம் வாங்கும் எண்ணத்தில் உள்ளவர்கள் அதை சில நாட்கள் தாமதப்படுத்துவது நல்லது.சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய வியாபாரத்தில் உங்களின் திட்டமிடல் சிறப்பாக இருக்கும். நினைத்த விஷயங்கள் செய்து முடிக்க முடியும். உங்கள் வியாபாரம் மற்றும் வேலையில் குறைந்த முயற்சியில் நீங்கள் நினைத்ததை முடிக்க முடியும். இன்று நண்பர்களுடன் பேசி மகிழ்வீர்கள்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று எந்த ஒரு வேலையிலும் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் சரியான திட்டமிடல் அவசியம். இன்று சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பண வரவு சிறப்பாக இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் கல்வியில் நல்ல வெற்றி கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பணம் தொடர்பான சாதகமான சூழல் இருக்கும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் விருப்பங்களும், வேலையில் முன்னேற்றமும் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று வெகு தூர பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. மாமியார் வீடு மூலம் நிதி ஆதாயம் பெறுவீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் திருமணத்தில் இருந்த தடைகள் நீங்க வாய்ப்பு உள்ளது.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் செயலில் கவன சிதரல்களை தவிர்க்கவும். தடைப்பட்ட வேலைகளை முடிக்க திட்டமிட்டுச் செயல்படவும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் செயல்படுத்த சாதகமான வாய்ப்பு உண்டு. உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் மனைவியுடன் இருந்த தகராறுகள் நீங்கும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று பிறரின் பேச்சுக்கு மதிப்பு அளித்தாலும், முடிவு எடுக்கும் விஷயத்தில் யோசித்து செயல்படவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நிலம் வாங்குதல், வீடு கட்டுதல் தொடர்பான பணிகளில் ஈடுபடுவீர்கள். அது தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். இன்று அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய சிரமப்படுவீர்கள். உங்களின் வருமானத்தை மனதில் வைத்து செலவு செய்யவும். இன்று ஆன்மீகப் பணிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். மனமகிழ்ச்சி அதிகரிக்கக் கூடிய நாள். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வணிக ரீதியாக சிறப்பான நாள். வியாபாரம் தொடர்பான முதலீடு விஷயத்தில் நல்ல லாபத்தை பெறலாம். கல்வியில் இருந்த தடைகள் நீங்கும்.

Share
Related Articles
tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 06 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 6.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 செவ்வாய்க் கிழமை, சந்திரன் சிம்மம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 02 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 2.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 19, வியாழக் கிழமை, சந்திரன் மிதுனம்...