ஜோதிடம்
இன்றைய ராசிபலன் : 30 ஆகஸ்ட் 2024 – Today Rasi Palan
இன்றைய ராசிபலன் : 30 ஆகஸ்ட் 2024 – Today Rasi Palan
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 30, 2024, குரோதி வருடம் ஆவணி 14 வெள்ளிக் கிழமை, சந்திரன் மிதுனம், கடகம் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிக ராசியில் உள்ள கேட்டை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பிறரிடம் அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். உங்களின் ஆணவத்தை கைவிடுவது நல்லது. உங்கள் வீட்டில், அனைவரும் விட்டுக்கொடுத்து செல்லவும். தொழில், வியாபாரம் தொடர்பாக பண வருவாய் சிறப்பாக இருக்கும். என்று உங்களின் குறைந்த முயற்சிக்கும் சிறப்பான பலன் கிடைக்கும் என்பதால் திட்டமிடலுடன் செயல்படவும். விதிமுறைகளை பின்பற்றி செயல்படுவது நல்லது.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சற்று ஏற்ற இறக்கமான நாளாக இருக்கும். உங்கள் வேலைகளை திட்டமிட்டு செய்வது நல்லது. ஆரோக்கியத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடினமான சூழலை எதிர்த்து போராடவும். பணியிடத்தில் வேலை தொடர்பாக புதிய அனுபவங்கள் கிடைக்கும். இன்று உங்களின் பணம் வருவாய் சிறப்பாக இருக்கும் என்றாலும் செலவு அதிகரிக்கும். இன்று குடும்ப சூழ்நிலையை சிறப்பாக சமாளிப்பீர்கள்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டிய நாள். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். பணியிடத்தில் அனுபவத்தின் மூலம் லாபத்திற்கான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை உணர்வு அதிகரிக்கும். வேலை தொடர்பாக பயணங்கள் செல்ல வாய்ப்புள்ளது. இன்று உங்களின் கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று தேவையற்ற சச்சரவுகள், பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது அதிருப்தி அடைய வாய்ப்பு உள்ளது. உங்களின் மனம் அலைக்கழிக்கப்பட வாய்ப்புள்ளது. இன்று உங்களின் வருமானம் குறைவதோடு, செலவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. புதிய வேலைவாய்ப்புகள் தேடி வரும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று வேலை விஷயத்தில் சாதகமான சூழல் இருக்கும். கடந்த சில நாட்களை விட இன்று உங்களுக்கு ஆடம்பரங்களும், சுகபோகங்களும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். வீட்டில் தேவையற்ற வாக்குவாதங்கள் கவலையை அதிகரிக்கும். பணியிடத்தில் வேலையில் வெற்றி கிடைக்கும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று அன்புக்குரியவர்களின் வருகை வீட்டில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். இன்று செலவுகள் அதிகரிக்கும். அதனால் உங்களின் சேமிப்புகள் குறைய வாய்ப்புள்ளது. மனதில் வெறுப்புணர்வு அதிகரிக்கும். வேலையில் சிந்தனையுடன் செயல்படவும். வியாபாரம் தொடர்பாக கூடுதல் கவனத்துடன் செயல்படவும். உங்கள் வேலையில் முன்னேற்றமான சூழலில் இருக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் மனதில் வெறுப்பு உணர்வு அதிகரிக்கும். இன்று நேர்மறையான சிந்தனை உடன் செயல்படவும். உங்களின் பேச்சு, நடத்தை சிக்கலில் ஆழ்த்த வாய்ப்பு உள்ளது. உங்களின் விருப்பத்தை பிறர் மீது திணிக்க முயல்வீர்கள். இன்று பிறரின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படவும். தேவையற்ற பேச்சு, கோபத்தால் உங்களின் மரியாதை குறையும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பணம் சார்ந்த விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. இன்று பெரிய பண பரிவர்த்தனைகள் தவிப்பது நல்லது. உங்களின் வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். உங்கள் வேலைகளை கண்ணும் கருத்துமாக செய்து முடிக்கும் முயற்சி செய்யவும். இன்று யோசிக்காமல் பிறருக்கு எந்த ஒரு வாக்குறுதியை அளிக்க வேண்டாம். வணிகத்தில் லாபம் அதிகரிக்க கூடுதல் முயற்சி தேவைப்படும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று மங்களகரமான நாளாக இருக்கும். உங்களின் நடவடிக்கைகளில் கட்டுப்பாடு அவசியம். பிறரின் மீது தேவையற்ற அவதூறுகளைத் தவிர்ப்பது நல்லது. இன்று சட்டம் தொடர்பான விஷயங்கள், பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். நாளின் தொடக்கத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். இன்று சொத்து, பணம் தொடர்பான கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இன்று தேவையற்ற எண்ணங்களை தவிர்த்து நேர்மறையான சிந்தனை உடன் செயல்படவும். பணியிடத்தில் சோம்பலை கைவிட்டு, திட்டமிட்டு செயல்படவும். பிறரின் மனதையும் புரிந்துகொண்டு செயல்படவும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உங்களின் வேலை, வியாபாரம் தொடர்பாக புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பணியிடத்தில் உங்களை நீங்கள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். பணம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. இன்று வரவை விட செலவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று நீங்கள் தலைவலி, வயிறு தொடர்பான பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் வேலையில் உற்சாகம் குறையும். பணியிடத்தில் தடைப்பட்ட வேலைகளை முடிக்க அதிக உழைப்பு தேவைப்படும். இன்று கடன் வாங்குவது, கொடுப்பதை தவிர்க்கவும். பணம் சம்பாதிப்பதற்காக ஒழுக்க கெடான வேலைகளில் ஈடுபட வேண்டாம்.