ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Share
Rasi Palan new cmp 14 scaled
Share

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஏப்ரல் 26, 2024, குரோதி வருடம் சித்திரை 13 வெள்ளிக் கிழமை, சந்திரன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீன ராசியில் உள்ள ரேவதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். உங்கள் வேலையில் நல்ல வெற்றியை பெறுவீர்கள். உழைப்பின் கவனம் செலுத்த முன்னேற்றம் நிச்சயம் உண்டாகும். குடும்ப விஷயம் குறித்து கவலை ஏற்படும். இருப்பினும் வருத்தப்படாமல் பிரச்சனைகளை தீர்க்க யோசிக்கவும். அனா விஷயத்தில் நற்பலனை தெரிவீர்கள். உங்களின் ஆசை நிறைவேற வாய்ப்புள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று கடினமான நாளாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தினர், நண்பர்களிடம் வாக்குவாதம், சண்டையிடுவதை தவிர்க்கவும். அலுவலக அரசியல் இருந்து விலகி இருக்கவும். இன்று பொழுதுபோக்கிற்காக அதிக பணம் செலவிடவும் நேரிடும். நிதி விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.. திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். வாழ்வில் மறக்க முடியாத நாளாகவும், வாய்ப்புகளும் கிடைக்கும். அன்பானவர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்களின் நிறைவேறாத ஆசைகள் நிறைவேறி மகிழ்ச்சி அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளை மும்மரமாக செயல்படுவீர்கள். உறவுகளை புரிந்து கொண்டு நடந்து கொள்ளவும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று தொல்லை தரக்கூடிய நாளாக இருக்கும். எந்த ஒரு வேலையிலும் கவனம் செலுத்தி செயல்படவும். இன்று யாரையும் நம்ப வேண்டாம். உங்கள் உழைப்பின் மீது நம்பிக்கை வைக்கவும். குடும்பம், பணியிடத்தில் கோபத்தை தவிர்க்கவும். இன்று என்ன விஷயத்திற்கும் எதிர் வினை ஆற்ற வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் செயல் மற்றும் செலவுகளை கட்டுப்படுத்தும் வேண்டியது அவசியம்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று பிரச்சனைகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் வேலையில் வெற்றி பெற கூடுதல் முயற்சியும், நேரமும் தேவைப்படும். உறவில் ஸ்திர தன்மை அதிகரிக்கும். அன்புக்குரியவர்களுடன் நல்ல உறவை பேண வேண்டியது அவசியம். தொழில் முன்னேற்றத்திற்கான புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். பல வாய்ப்புகள் தேடி வரும். தொழிலில் பெரிய வெற்றிகளை பெறலாம். இன்று கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் சிறந்த பலனை தரும். வணிக விஷயத்தில் நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். வேலை விஷயத்தில் பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். மனதில் உற்சாகமும், நம்பிக்கையும் பிறக்கும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் பண பலன்களை பெறுவீர்கள். உங்கள் பேச்சில் கட்டுப்பாடு அவசியம். பணியிடத்தில் அரசியலை தவிர்க்கவும். இன்று அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். திருமண வாய்ப்பு கிடைக்கும். எதிர்மறையான சிந்தனைகளில் இருந்து விலகி இருக்கவும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டிய நாள். உடல் நலம் தொடர்பாக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கையில் காதல் நிறைந்ததாக இருக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். என்று உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முடியும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று சிரமமான நாளாக இருக்கும். வேலையில் தாமதம் மற்றும் சோம்பல் இருக்கும். உங்களின் ஆளுமை திறன் அதிகரிக்கும். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். வேலை, குடும்பம் தொடர்பாக நீங்கள் எடுக்கக்கூடிய சரியான முடிவு அற்புதப் பலனை தரும். வேலை தொடர்பாக அர்ப்பணிப்புடன் செயல்பட உங்களின் புகழ் அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதற்கான நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் மங்களகரமான நாளாக இருக்கும். உங்கள் வேலையில் பெரிய வெற்றிகளை பெறுவீர்கள். கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் திட்டங்கள் சரியாக செயல்படுத்தி இலக்குகளை அடைய பொன்னான நாளாக இருக்கும். பணி இடத்தில் பிறரின் ஆலோசனைகள் உங்கள் வெற்றிக்கு உதவும். உடல் ஆரோக்கியத்தில், உணவு விஷயத்தில் சற்று கவனம் தேவை.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வெற்றிகளை தரக்கூடிய நாளாக இருக்கும். எல்லா வேலைகளிலும் சிறப்பாக செயல்பட்டு மன நிறைவு பெறுவீர்கள். குடும்பத்தினர், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் புதிய உறவுகள் கிடைக்கும். உங்களின் சிந்தனை மற்றும் முடிவுகளில் தடுமாற்றம் இருக்கும். நிதி நிலையில் நல்ல லாபம் இருக்கும். வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படும்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று தொல்லை தரும் நாளாக இருக்கும். உங்கள் வேலைகளில் பல தடைகளை சந்திக்க நேரிடும். உடல் சார்ந்த சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இன்று உங்களின் இலக்குகளை அடைய கடின உழைப்பு தேவைப்படும். உங்களின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டிய நாள். என்று உங்களின் செயல்பாடு மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும். கல்வி விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

Share
Related Articles
tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 02 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 2.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 19, வியாழக் கிழமை, சந்திரன் மிதுனம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 01.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 18, புதன் கிழமை, சந்திரன் ரிஷப...