ஜோதிடம்

இன்றைய ராசி பலன் -15.03.2024 – Today Rasi Palan

Share
tamilni 301 scaled
Share

இன்றைய ராசி பலன் -15.03.2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மார்ச் 15, 2024, சோபகிருது வருடம் பங்குனி 2 வெள்ளிக் கிழமை, சந்திரன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். கன்னி ராசியில் உள்ள உத்திரம், அஸ்தம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு நற்பெயர் அதிகரிக்கும். உங்களின் குடும்ப பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். சில வேலைகளை பற்றி கவலைப்படுவீர்கள். இன்று சகோதரர்களின் உதவிகள் சிறப்பாக கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். ஆசைப்பட்ட புதிய சொத்துக்களை வாங்குவீர்கள்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. பணியிடத்தில் வேலை தொடர்பாக மேலதிகாரிகளிடம் கோபப்படுவீர்கள். உங்கள் எண்ணங்களை மற்றவர்களிடம் வெளிப்படுத்த வேண்டாம். என்று உங்களின் விருப்பங்கள் நிறைவேறி மனமகிழ்ச்சி கிடைக்கும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் அவசரமாக அல்லது உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். உங்கள் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்கவும். உடல் ஆரோக்கியத்தை அலசியப்படுத்தக் வேண்டாம். குடும்ப தகராறுகள் தொடர்பான விஷயங்களில் தீர்வு கிடைக்கும். என்று வேலை தொடர்பாக பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று புதிய சொத்துக்கள் வாங்கும் சாதக நாள். வீடு, மனை, நிலம் வற்றை வாங்கும் முயற்சிகள் வெற்றி பெறும். கூட்டு தொழில் செய்யக்கூடியவர்களின் புதிய திட்டங்கள் நிறைவேறும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் தீரும். உங்கள் பொறுப்புக்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சரியான நேரத்தில் வேலையை முடித்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று கலமையான பலன்கள் தரக்கூடிய நாள். மாணவர்கள் முழு உழைப்புடன், அர்ப்பணிப்புடன் செயல்படுவீர்கள். வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். கடந்த கால தவறுகளில் இருந்து கற்ற அனுபவம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பிறரின் இனிமையான பேச்சை கேட்டு மயங்கி விடாதீர்கள். உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று படிப்பிலும், ஆன்மீகத்திலும் உங்களின் ஆட்டம் அதிகரிக்கும். பணம் சம்பந்தமான பிரச்சனை நண்பர்களின் உதவியாள் தீர்ப்பீர்கள். நண்பர்கள், உறவினர்களுடன் விருந்து விழாக்களில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. வணிகம் தொடர்பான விஷயங்களில் அனுபவசாலிகளின் உதவியை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க முடியும். உங்களை மெருகேற்றிக் கொள்வதற்கான தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்தவும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். நண்பர்களுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப விஷயங்களில் அக்கறை காட்டுவீர்கள். வியாபாரத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். வருமானம் அதிகரித்து மனமகிழ்ச்சி கூடும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்புள்ளது.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று மக்கள் பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூக பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள். உங்களுக்கு பல லாபம் தரக்கூடிய புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். புதிய நபர்களுடன் பழகுவதில் கவனம் தேவை. இன்று உங்களின் சகோதரத்துவ உணர்வு அதிகரிக்கும். சில வேலைகளில் மும்முரமாக செயல்படுவீர்கள்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நிதி கண்ணோட்டத்தில் உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். உங்களின் செல்வ நிலை அதிகரிக்கும். நம்பிக்கை ஆழமாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த மும்முரமாக செயல்படுவீர்கள். உங்கள் துணையுடன் உறவு வலுப்படும். அவருக்கு பரிசு வாங்க நினைப்பீர்கள். தடைபட்ட வேலைகளை எளிதாக முடிக்க முடியும்.. புதிய வேலை தொடங்க நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் சில நீண்ட கால திட்டங்களை செயல்படுத்த நினைப்பீர்கள்.. உங்கள் பேச்சில் நிதானமும், கண்ணியம் மரியாதையை பெற்றுத்தரும். ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். உங்களின் பழைய முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தை பெற்றிட முடியும். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிறைந்ததாக இருக்கும். உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். நெருங்கியவர்களின் நம்பிக்கை பெறுவதில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் திறமை மற்றும் சிந்தனை சாதக பலன்களை அள்ளித் தரும். நிதி விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். எந்த ஒரு பண பண பரிவர்த்தனைகளிலும் கவனம் தேவை. வியாபாரத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று புதிய வேலைகளை தொடங்க நல்ல நாளாக இருக்கும். பணியிடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வலிகளில் வருமானங்கள் கிடைக்கும். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள். ஒரு பெரிய இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். எந்த ஒரு வேலையும் தயக்கம் இன்றி நம்பிக்கையுடன் செய்ய வெற்றியும், நற்பலனும் கிடைக்கும். பயணத்தின் மூலம் அனுகூல பலன்களை அடைவீர்கள்.

Share
Related Articles
tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 06 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 6.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 செவ்வாய்க் கிழமை, சந்திரன் சிம்மம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 02 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 2.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 19, வியாழக் கிழமை, சந்திரன் மிதுனம்...