ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 08.11.2023 – Today Rasi Palan

Published

on

இன்றைய ராசி பலன் 08.11.2023 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் நவம்பர் 8, 2023, சோபகிருது வருடம் ஐப்பசி 22 புதன் கிழமை, சந்திரன் சிம்மத்தில் ராசியில் சஞ்சரிக்கிறார். மகர ராசியில் உள்ள திருவோணம், அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சந்திர பகவான் சிம்ம ராசியில் இருப்பதால் உங்களுக்கு குழந்தைகளால் நன்மைகளும் குடும்பத்தில் அமைதியும் உண்டாகும். உங்களுக்கு நற்செய்திகள் காத்திருக்கிறது. அலுவலகத்தில் ஏற்படக்கூடிய மாற்றம் உங்களுக்கு சாதகமான பலனை தரக்கூடியதாக இருக்கும். உங்களின் மனதில் தெளிவும், மன உறுதியும் ஏற்பட வாய்ப்புள்ளது. உயர் அதிகாரிகளுடன் மன வேற்றுமைகள் மாறும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு தன லாபங்கள் ஏற்படும். உங்களின் எண்ணங்கள் நிறைவேற கூடிய நாளாக அமையும். குழந்தைகளால் பெருமை சேரும். இன்று மாலை ஒரு விருந்தினர் உங்கள் வீட்டிற்கு வரலாம், இது சில பழைய நினைவுகளைப் புதுப்பித்து உங்கள் மனதை மகிழ்விக்கும்.
இன்று கருட பெருமானை வாங்குவது நல்லது. கருடனுக்கு தீபம் ஏற்று வழிபாடு செய்ய மனக்குறைகள் தீரும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு குதூகலமான நாளாக அமைகிறது. மனபாரங்கள் தீரக்கூடிய நாள்.குடும்பத்தில் பிரிந்து இருக்கக்கூடிய கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். காதலர்களுக்கு நல்ல ஏற்றம் தரக்கூடிய நாளாக அமைகிறது. இன்று ஒரு சிலருக்கு திருமண யோகம் கைகூடும்.

பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன் இன்று நீங்கள் சில மதிப்புமிக்க சொத்துக்களைப் பெறுவீர்கள். வாகனத்தைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்கவும்.தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும்.மன உறுதியை அதிகரிக்கும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று ராசிக்கு இரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்க கூடிய சந்திர பகவான் காரணமாக வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். மருத்துவ செலவுகள் குறையும். பல நாட்களாக குடும்பத்தில் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு நல்ல முடிவு கிடைக்கும். நண்பர்களின் உதவி உங்களுக்கு மன நிறைவை தரும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று ராசியில் இருக்கக்கூடிய சந்திரபாகவான் உங்களின் மனக் குழப்பங்களைத் தீர்க்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். விட்டுப் பிரிந்து சென்ற குழந்தைகள் மீண்டும் குடும்பத்தை சேர்வது மன ஆறுதலை தரும். நீண்ட நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த குடும்ப சண்டைகள் தீரும். குடும்ப ஒற்றுமை மேம்படும். மாலை நேரத்தில் நற்செய்திகள் காத்திருக்கிறது.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மனம் ஆரோக்கியம் தரக்கூடிய நாளாக இருக்கும். எதிர்பார்த்த நன்மைகள் கைக்கு வந்து சேரும். நாட்களாக முடிக்க நினைத்த முக்கிய விஷயங்கள், தடைப்பட்ட வேலைகள் முடிந்து நிம்மதி அடைவீர்கள். இன்று இழுபறியில் இருக்கக்கூடிய விஷயங்கள் முடிஞ்ச மன மகிழ்ச்சி உண்டாகும்.
இன்று உங்களுக்கு இனிமையான பலன்களைத் தரும். உங்கள் வேலையிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இன்று உங்கள் மனைவியின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மாலை நேரத்தில் உங்களுக்கு நற்செய்திகள் காத்திருக்கிறது. இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. புதன்கிழமையான இன்று நரசிம்மரை வழிபாடு செய்யலாம். என்று பங்கு சந்தையில் முதலியிடம் நல்ல பலனை தரும்.
கல்வித்துறையில் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். உங்கள் பேச்சின் இனிமையை இழக்கக் கூடாது. செயலில் கவனம் செலுத்த வேண்டும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். ராசியில் புதபகவானும், பாக்ய ஸ்தானத்தில் இருக்கக்கூடிய சந்திரன் உங்களுக்கு இன்று நல்ல தெய்வ அனுக்கிரகத்தைக் கொடுப்பார்கள். இன்று தனலாபங்கள் உண்டாகும். நீங்கள் மகாவிஷ்ணு வழிபாடு செய்வது நன்மை தரும்.
இன்று உங்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்த எந்த ஒரு வேலையைச் செய்தாலும் அதில் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். இன்று மனைவியுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக அமைகிறது. பல நாட்களாக குடும்பத்திலிருந்து வந்த குழப்பங்களும், பிரச்சனைகளும் தீரும். வண்டி வாகனம் வாங்குவது, விற்பது தொடர்பாக, வீடு வாங்குவது விற்பது போன்ற விஷயங்களில் நல்ல மாற்றமும், லாபமும் கிடைக்க வாய்ப்புள்ளது.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது. இன்று உங்களின் வேலைகளை தொடங்குவதற்கு முன் விநாயகர் ஆலயத்தில் தீபமேற்றி வழிபாடு செய்யவும். இன்று நீங்கள் செய்யக்கூடிய எந்த ஒரு வேலையிலும் கூடுதல் கவனத்துடன் செய்ய அதில் வெற்றியும், முன்னேற்றமும் உண்டாகும்.
இன்று உங்களின் எண்ணங்கள் நிறைவேறும். மாலை நேரத்தில் நீங்கள் எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும். கனவுவகாரங்களில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மனதிருப்தி தரக்கூடிய நாளாக அமைகிறது. குடும்ப பாருங்கள் தீரக்கூடிய நாளாக இருக்கும். இன்று எடுத்துக் காரியத்தில் வெற்றியும், பெற்றோரின் ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கி . மேன்மை அடையும். மருத்துவ செலவுகள் குறையும். இன்று வியாபார முயற்சிகள் வெற்றியை தரும்.எண்ணங்கள் நிறைவேறக்கூடிய நாளாக அமைகிறது.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உற்சாகம் தரக்கூடிய நாளாக அமைகிறது. சண்டை சச்சரவுகள் இல்லாத நாளாக இருக்கும். இன்று குடும்பத்தில் அமைதியும், ஒற்றுமையும் ஓங்கும். இன்று மன நிறைவை தரக்கூடிய நாளாக அமையும். எதிர்பார்த்த நன்மைகள் கைக்கு வந்து சேரும். இன்று மீன ராசியினர் மகாவிஷ்ணு வழிபாடு செய்வதும், விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் நன்மை தரும்.

Exit mobile version