இன்றைய ராசிபலன் அக்டோபர் 23, 2023, சோபகிருது வருடம் ஐப்பசி 6 திங்கள் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் திருவாதிரை, அவிட்ட நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். கடக ராசியினருக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வேலையில் தொடர்புடையவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். வேலையில் தங்கள் மேலதிகாரிகளிடமிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். பணியாளர்களுக்கு சில கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படலாம். பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் உதவியால் அதை குறித்த நேரத்தில் முடிப்பதில் வெற்றி பெறுவார். உங்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.இன்று வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு நவராத்திரியில் உருவாகும் அற்புத சுபயோகம்: சில ராசிக்கு தொழில் வாழ்க்கையில் பொன்னான வாய்ப்பு கிடைக்கும்
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சுமாரான பலன்கள் கிடைக்கும். இன்று உங்கள் பணியிடத்தில் மாற்றங்களைச் செய்ய நினைத்தால் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் தந்தையின் உடல்நிலை குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்களின் தன்னம்பிக்கை குறையும், வியாபாரத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும். இன்று தொழில் சம்பந்தமாக பயணம் செல்ல நேரிட்டால் அது உங்களுக்கு நன்மை பயக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பிரச்சனைகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் குழந்தைகளிடமிருந்து சில ஏமாற்றமான செய்திகளைக் கேட்பீர்கள். குடும்பத்தில் பரஸ்பர கருத்து வேறுபாடு காரணமாக sகோபப்படுவீர்கள். குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்படலாம். இன்று நீங்கள் சில புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவீர்கள். அதன் மூலம் உங்கள் நிதி நிலையை வலுப்படுத்துவதில் வெற்றி பெறுவீர்கள்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மிக நிகழ்வுகளில் பங்கேற்பீர்கள். உங்களுக்கு வியாபாரத்தில் லாபகரமான ஒப்பந்தத்தைப் பெறுவீர்கள். உங்கள் தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் தந்தையின் ஆலோசனை கிடைக்கும்.நண்பர்களுடன் உல்லாசமாக கழிப்பீர்கள். நீங்கள் புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் கனவு நிறைவேறும். உறவினர்களுடனான கருத்து வேறுபாடு நீங்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுமாரான பலனைத் தரும். இன்று நீங்கள் ஒரு பழைய நண்பரை சந்திப்பீர்கள், இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்று குடும்பத்தில் திருமண யோசனைகள் குறித்து உறுப்பினர்களையும் கலந்தாலோசித்த பின்னரே நீங்கள் முடிவெடுக்கவும். உங்கள் சேமித்த பணத்தில் சிலவற்றையும் செலவிட வாய்ப்புள்ளது. இன்று தாயாரிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாக இருக்கும். இன்று நீங்கள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முயல்வீர்கள். உங்கள் நம்பிக்கையும் அதிகரிக்கும், நீங்கள் சட்டப்பூர்வ வேலைகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் மனைவியுடன் தனியாக சிறிது நேரம் செலவிட வாய்ப்புள்ளது. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை உருவாக்குவீர்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சில சொத்துக்களை வாங்கும் முயற்சியில் சாதக நாளாக இருக்கும். உங்கள் மூதாதையர் சொத்து தொடர்பான எந்தவொரு தகராறும் தீரும். உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். வேலையுடன் தொடர்புடையவர்கள் இன்று சில நல்ல வாய்ப்புகளைப் பெறலாம். எங்காவது பணத்தை முதலீடு செய்ய நினைப்பவர்கள் முதலீடு செய்ய ஏற்ற நாள். குடும்பத்தில் மூத்தவருடன் வாக்குவாதத்தால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் ஒரு பயணம் செல்ல நேரிட்டால் அந்த பயணம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்று உங்கள் நண்பர்களுடன் எங்காவது வெளியே செல்லத் திட்டமிடுவீர்கள். உங்கள் நண்பருடன் சில மனவருத்தம் ஏற்படலாம். இன்று உங்கள் மனைவியைச் சமாதானப்படுத்துவதில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சில மங்களகரமான விஷயங்கள் நடக்கும். நீங்கள் சில செல்வாக்கு மிக்க நபர்களைச் சந்திப்பீர்கள், இது உங்களுக்கு நன்மை பயக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். திடீரென்று சில பிரச்சனைகளால் நீங்கள் கவலைப்படுவீர்கள். இன்று உடல் நல பிரச்னைகளுக்கு மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஆன்மிகத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் எந்த முடிவையும் எடுக்கும் போது புத்திசாலித்தனத்துடனும், விவேகத்துடனும் மட்டுமே எடுங்கள். சொத்துக்களை வாங்க அல்லது விற்க நினைக்கும் நபர்கள் அதன் ஆவணத்தை சரியாக படித்து பார்க்கவும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும். இன்று உங்கள் மனதில் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் வேலைகள் அனைத்தும் எளிதாக முடிவடையும். நீங்கள் கூட்டுத் தொழில் செய்பவர்கள் அதில் எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.பந்தயத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். இன்று நீங்கள் மூத்த குடும்ப உறுப்பினர்களின் பேச்சு வருத்தத்தைத் தரும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். உங்கள் குழந்தை உங்கள் மீது கோபம், மனவருத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று உங்கள் எரிச்சல் தரக்கூடிய நாளாக இருக்கும். உங்கள் தந்தையுடன் பேசும்போது பேச்சில் இனிமையைக் கடைப்பிடிக்க வேண்டும். இன்று மாணவர்கள் கல்வியில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். கல்வி சார்ந்த விஷயங்களில் எளிதில் தீர்வு காண முடியும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று திடீர் உடல்நலக் குறைவு ஏற்படக்கூடும்.s அதனால் நீங்கள் கவலைப்படுவீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் சில விருப்பங்கள்,ஆசைகள் நிறைவேறும். இன்று நீங்கள் யாரையும் நம்புவதற்கு முன் கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்கள் அக்கம்பக்கத்தினருடன் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனம் தேவை.
- 2023 rasi palan
- daily rasi palan
- daily rasi palan sun tv
- daily rasi palan tamil
- dina rasi palan
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan tamil
- nalaiya rasi palan
- october rasi palan
- pugazh media rasi palan
- rasi palan
- rasi palan today
- rasi palan today tamil
- shelvi weekly rasi palan
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- Today Rasi Palan
- vendhar tv rasi palan
- weekly rasi palan
- weekly rasi palan october
- zee tamil rasi palan today