இன்றைய ராசி பலன் 27.09.2023 – Today Rasi Palan
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 27, 2023, சோபகிருது வருடம் புரட்டாசி 10 சனிக் கிழமை, சந்திரன் கும்ப ராசியில் உள்ள அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். கடக ராசியில் உள்ள பூசம் சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று ராசிக்கு சந்திரன் லாப ஸ்தானத்தில் அமைந்திருப்பதால் இன்று உங்களுக்கு பலவிதத்தில் லாபம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். படிக்கும் குழந்தைகளுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். அஸ்வினி நட்சத்திர பெண்களுக்கு விருப்பங்கள் நிறைவேறும்.
பரணி, கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு இன்று மன திருப்தி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். இன்று மகாவிஷ்ணு வழிபாடு செய்வது சிறப்பானது.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சற்று அலைச்சல் அதிகமான நாளாக இருக்கும். இருந்தபோதிலும் உங்களின் வேலைகள் சிறப்பாக முடிவடையும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் கழிக்க . முடியும். விருந்து விழாக்களில் பங்கேற்பது, குழந்தைகள் மூலம் மன நிறைவு என நான் சிறப்பாக இருக்கும். இன்று சந்திர பகவான் ரிஷப ராசிக்கு ரத்தம் இடத்தில் மறைவு ஸ்தானத்தில் இருப்பதால் சிவபெருமானுக்கு அபிஷேகம், அர்ச்சனை வழிபாடு செய்வது நல்லது. இன்று உங்களுக்கு தன லாபம் உண்டு.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். சந்திரன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் வழக்கு விசாரணைகளில் சாதகமான சூழ்நிலையும், இன்று நீங்கள் நினைத்த வேலைகள் சிறப்பாக முடியும். இன்று விநாயகர் வழிபாடு செய்வது விக்கினங்களைத் தீர்க்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று திருப்தி கிடைக்கக்கூடிய நாள். இன்று ஏற்ற இறக்கம் நிறைந்த நாளாக இருந்தாலும் மன நிம்மதி கிடைக்கும். நீண்ட தூர பயணங்கள் ஒரு சிலருக்கு ஏற்படும். இன்று உங்களுக்கு நாள் முழுவதும் சந்திராஷ்டமம் அமைகிறது.
இன்று கடக ராசியினர் பசுவுக்கு உணவளிப்பது நல்லது.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். நீண்ட தூர பயணங்கள் மன ஆறுதலும்,லாபத்தையும் தரக்கூடியதாக இருக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. சந்திரன் ஏழாம் இடத்தில் இருப்பதால் ஒரு சிலருக்கு திருமண யோகம் கை கூடும்.
இன்று காலையில் விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்யவும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று காதல் விஷயத்தில் மன நிம்மதியும், திருப்பியும் கிடைக்கும்.நல்ல செய்திகள் கிடைக்கும். சுப செய்திகள் காத்திருக்கிறது. வெளிநாடு தொடர்பான வேலை செய்பவர்களுக்கும்,வெளிநாட்டில் இருந்து வரக்கூடியவர்களுக்கு நல்ல ஒரு சிறப்பான செய்திகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல ஒரு செய்திகள் கிடைக்கும். இன்று நீங்கள் கருட வழிபாடு செய்வது நல்லது.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன அமைதியும், திருப்பியும் கிடைக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு நீங்கள் எடுக்க கூடிய முடிவு மனதிற்கு ஆறுதலை தரக்கூடியதாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் தீரும். விநாயகர் வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குவது நல்லது.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் செலவுகள் அதிகமாக இருக்கும். இன்று காலையில் நீங்கள் எதிர்பார்த்த நல்ல விஷயம் கிடைக்கும். மேலே நின்று உங்களுக்கு சுப விரயங்கள் காத்திருக்கிறது. மன அமைதி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் எடுத்துக் கொண்ட வேளையில் நல்ல முடிவுகள் கிடைக்கும். இன்று நீங்கள் விநாயகர், முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று சிறுச்சிறு உடல் நலப் பிரச்சினைகள் வந்து செல்லும். இருந்த போதிலும் இன்று உங்களுக்கு மன ஆறுதல் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். ஆரோக்கிய குறைபாட்டால் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்று காலையில் தன்வந்திரி வழிபாடு செய்வது நன்மை தரும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சந்திர பகவானின் சஞ்சாரம் நடப்பதால் உங்களின் ஆரோக்கியம் மேம்படும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சிலருக்கு நீண்ட தூர பயணங்கள் செல்ல வேண்டியது இருக்கும். அலுவலகம் சார்ந்த வேலையில் உங்களுக்கு மன ஆறுதல் கிடைக்க கூடிய நாளாக இருக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சந்திர பகவான் உங்கள் ராசியில் இருப்பதால் மனக்குழப்பங்கள் தீரும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். விநாயகர் வழிபாடு உங்களுக்கு வெற்றியைத் தரும். வழக்கு விசாரணைகளை ஒத்தி வைப்பது நல்லது. நூலகம் சார்ந்த விஷயங்கள் சற்று மன குழப்பங்கள் ஏற்படும். குடும்பத்திலும், பணியிடத்திலும் சந்தோசம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று மன ஆறுதல் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட தூர பயணங்கள் லாபத்தையும், நிம்மதியையும் தரக்கூடியதாக இருக்கும். காலை வேளையில் நல்ல செய்திகள் வந்து சேரும். சகோதர சகோதரர்களுக்கு இடையே இருந்த மனக்கசப்பு இருந்த மன கசப்பு தீர்ந்து ஒற்றுமை ஏற்படும். சொத்துக்கள் சார்ந்த சாதகமான சூழல் நிலவும். இன்று உங்களுக்கு செலவுகள் காத்திருக்கிறது.
- 2023 rasi palan
- daily rasi palan
- daily rasi palan sun tv
- daily rasi palan tamil
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan tamil
- nalaiya rasi palan
- pugazh media rasi palan
- rasi palan
- rasi palan today
- rasi palan today tamil
- shelvi rasi palan
- sithariyal rasi palan
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- Today Rasi Palan
- today rasi palan in tamil
- tomorrow rasi palan
- vidyadharan rasi palan
- zee tamil rasi palan today