ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 13.09.2023 – Today Rasi Palan

Published

on

​இன்றைய ராசி பலன் 13.09.2023 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் செப்டம்பர் 13, 2023, சோபகிருது வருடம் ஆவணி 27 புதன் கிழமை. சந்திரன் சிம்ம ராசியில் உள்ள மகம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். சதுர்த்தசி திதி நடக்கக்கூடிய இன்று சித்த யோகம் உள்ள நாள். மகர ராசிக்கு திருவோணம் சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.

மேஷம்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று அலுவலகம் சார்ந்த விஷயங்களில் நல்ல ஒரு முன்னேற்றத்தைக் காணலாம்.சற்று குழப்பங்கள் காலை வேலையில் இருந்தாலும், பிற்பகலில் குழப்பங்கள் தீரும். அஸ்வினி நட்சத்திர பெண்களுக்கு இன்று உயர்வான நாளாக அமையும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். மிருகங்களின் சூழல் சாதகமாக இருக்கும். குறிப்பாக சந்திரபாகவான் பூர்வ புண்ய ஸ்தானத்தில் இருப்பதால் அதன் பலம் அதிகரிக்கும்.

இன்று அன்னதானமும் விநாயகருக்குப் பால் அபிஷேகம் செய்வது நல்லது.

ரிஷபம்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் வெற்றியை தரக்கூடிய நாளாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் பிரச்சனைகள் தீரும்.பிரச்சனை தீர்க்க நண்பர்களின் உதவி கிடைக்கும். இருப்பினும் இன்றைய புதிய நண்பர்களுடன் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மிருகசீரிஷம் நட்சத்திர பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஐந்தாம் இடத்தில் செவ்வாய், 6ல் போன்ற கேது இருப்பதால் விவகாரங்களில் கவனம் தேவை.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் அற்புதமான நாளாக அமையும். பிரிந்து சென்ற சொந்தங்கள் மீண்டும் இனிய வாய்ப்புள்ளது. முயன்று தோற்றுப்போன விஷயங்கள் இன்று வெற்றிகரமாக செய்து முடிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் உங்களின் மனதில் தைரியம் அதிகரிக்கும். இன்று மனதிற்கு திருப்தியான நாளாக அமையும். இன்று நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியையும், குடும்பத்தில் சுப செலவும் ஏற்பட வாய்ப்புள்ளது.

கடகம்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று முழுவதும் மனதிற்கு ஆறுதல் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். இன்று மனதிற்கு மகிழ்ச்சியை தரக்கூடிய நல்ல செய்திகள் கிடைக்கும். குழந்தை படிப்பு, சொத்து வாங்குதல் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடிய நாளாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று வெற்றியை தரக்கூடிய நாளாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் நண்பர்களின் உதவிகள் மூலம் தீர்க்கப்படும். பய உணர்வு போக்கக்கூடிய நாளாகவும் இருக்கும். ராசியில் இருக்கக்கூடிய சூரியன் மற்றும் புதன் பகவானால் மனதிற்கு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்ய இயலும் வெற்றி கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று கடன் தொல்லை தீரும். இன்று உங்களுக்கு தன லாபமும், நண்பர்களால் உதவி கிடைக்கும்.

உங்கள் பணியிடத்தின் சக ஊழியர்கள் இன்று உங்களுக்கு ஒரு தலைவலியாக மாறுவார்கள். திருமண வாழ்க்கையில் இனிமையான சூழ்நிலையை அனுபவிப்பீர்கள். உங்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கலாம். அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். அன்றாட வியாபாரத்தில் இன்று பண லாபம் உண்டாகும்.
மாத சிவராத்திரி, சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது. இன்று வில்வ அர்ச்சனை செய்வதால் உங்களுக்கு இருக்கக்கூடிய கிரக தோஷங்கள் நீங்கும்.

துலாம்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன நிறைவு தரக்கூடிய நாளாக இருக்கும். இன்று லாபத்தில் இருக்கக்கூடிய சூரிய, புதன், சந்திரன் உங்களுக்கு தன லாபத்தை தரக்கூடியதாக இருக்கும். பல நாட்கள் ஆக நீங்கள் தோற்றுப் போன, கடினமான விஷயங்கள் இன்றும் நிறைவேறும்.

வியாபாரத்தில் சில தவறான முடிவுகளால் நீங்கள் சிக்கலில் சிக்கிக் கொள்ளலாம், இதனால் உங்களுக்கு பணச் செலவும் ஏற்படும்.அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இன்று குருவாயூரப்பன் வழிபாடு செய்வது நல்லது.

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் தேர்வில் கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். உங்கள் வேலையில் கவனமும், வார்த்தைகளில் இனிமையும் தேவை. இன்று உங்களுக்கு நிதி நன்மைகளை பெறுவீர்கள். திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கும். இன்று உங்கள் குடும்பத்தில் குழந்தைகளுடன் மாலை பொழுதை ம்கிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள்.

தனுசு
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டிய நாள். கடனை திருப்பிச் செலுத்துவது மிகவும் கடினமாக இருக்கும்.உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்வது அவசியம். இன்று வணிகத்தில் ஒரு பெரிய ஆர்டர் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். இன்று மாலையில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, நடத்த வாய்ப்புள்ளது.

மகரம்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சொத்து சம்பந்தமான தகராறு தீர்ந்து மன மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் செலவுகள் அதிகமாக இருக்கும். வேலைவாய்ப்பை நோக்கி வேலை செய்பவர்களுக்கு இன்று சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும்.

வேலையில் இருந்த தடைகள் நீங்கும். உங்கள் மனைவியிடமிருந்து முழு ஆதரவையும் தோழமையையும் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் சாதக சூழல் இருக்கும். வேலை மற்றும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்று மேலதிகாரிகளுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

கும்பம்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று பெண் தோழி மூலம் வேலையில் ஆதரவு கிடைக்கப் பெறலாம். உங்கள் எல்லா வேலைகளையும் முடிக்க முயல்வீர்கள். உங்கள் திறமை வியக்க வைக்கும். இன்று, உங்கள் வணிகத்திற்கான புதிய திட்டத்தை செயல்படுத்துவீர்கள். சகோதரர்களுடன் ஏதேனும் பிரச்சனை இருந்திருந்தால் இன்றே தீரும். மாலை நேரம் நண்பர்களுடன் விழாக்கள், விசேஷங்களில் கலந்து கொள்ளலாம்.

மீனம்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தொழிலில் முதலீடு செய்ய அதிக பணம் செலவழியும். அதன் மூலம் நிறைய நன்மைகளும் கிடைக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

உத்தியோகத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். ஆரோக்கிய குறைபாடு ஏற்பாடும் என்பதால் உணவு பழக்கத்தை கட்டுப்படுத்தவும். காதல் வாழ்க்கையில் இனிமை இருக்கும். உங்கள் வேலையை மாற்ற நினைத்தால் அதற்கும் நாள் நன்றாக இருக்கும்.

Exit mobile version