இன்றைய ராசி பலன் 27.07.2023 : Daily Horoscope, July 27
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 27.07.2023 : Daily Horoscope, July 27

Share

இன்றைய ராசி பலன் 27.07.2023 : Daily Horoscope, July 27

இன்று சந்திரன் விருச்சிக ராசியில் உள்ள விசாகம், அனுஷம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியினருக்கு நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக செயல்படவும். இன்றைய கிரக நிலை அடிப்படையில் சிம்மம், துலாம் ராசிக்கு மிக சிறப்பான பலன்கள் கிடைக்கும். இன்றைய ராசி பலன் 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்
இன்று, மேஷ ராசியினருக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் உங்களின் எந்த ஒரு செயலிலும் கவனம் தேவை. பேச்சிலும், செயலிலும் நிதானம் தேவை. வணிக ரீதியாக சரியான திட்டங்களுடன் செயல்படவும். வேலை, வியாபாரம் விஷயங்களில் எச்சரிக்கை தேவை. முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

தொழில், வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல வேண்டியிருக்கும். வேலையில் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். திடீரென்று சில பிரச்சனைகள் வரலாம், அதனால் மனதில் குழப்பம் ஏற்படும்.

ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி தரும் நாளாக இருக்கும். வியாபாரத்தில், சற்று தேக்க நிலை இருக்கும். உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். நீங்கள் நிதி பலத்தைப் பெறுவீர்கள். மாணவர்கள் இன்று கல்வியில் வெற்றி பெறலாம். எந்த போட்டியிலும் வெற்றி பெறலாம்.

குடும்ப வாழ்க்கையில், நெருங்கிய உறவினர்களின் மகிழ்ச்சிக்காகக் கொஞ்சம் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பொழுதுபோக்க தருணங்கள் அமையும்.
பணியிடத்தில் நிதானத்துடன் செயல்படவும், சர்ச்சைக்குரிய விஷயங்களில் இருந்து விலகி இருக்கவும்.

மிதுனம்

மிதுன ராசியினருக்கு இன்று சாதகமாக இருக்காது. இன்று வேலை-வியாபாரம் பற்றி மனதளவில் கவலை ஏற்படலாம். எந்த விஷயத்தையும் திட்டமிட்டுச் செயல்படுங்கள். மதியத்திற்கு பிறகு நிலைமை மேம்படுத்த முடியும். இன்று நீங்கள் சோம்பலைக் கைவிட்டு செயல்பட வேண்டும். குடும்ப வாழ்க்கையிலும், பணியிடத்திலும் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தி செயல்படவும். நிதானமான பேச்சு அவசியம்.

கடக ராசி
கடக ராசிக்காரர்கள் இன்று எந்த வேலை செய்தாலும் எளிதில் முடிவடையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். எந்த வேலையையும் செய்தால், அதில் கண்ணும் கருத்துமாக முடிக்கவும். புதிய வாய்ப்புகள், ஒப்பந்தங்கள் சார்ந்த விஷயங்களில் முழுமையாகச் சரிபார்க்கவும். சில பெரிய சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் சில நாட்களாக சந்தித்த பிரச்சனைகள் மற்றும் சங்கடங்கள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். வேலை வியாபாரத்தில் சாதகமான செய்திகள் கிடைக்கும். இன்று உத்தியோகத்தில் சக ஊழியர்களின் தன்னிச்சையான நடத்தையால், நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.

பணியிடத்தில் சக ஊழியருடன் கருத்து வேறுபாடுகள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படலாம். நிதி விஷயங்களில், பணத்தை கவனமாக முதலீடு செய்வது அவசியம்.

கன்னி
கன்னி ராசிக்கு இன்று பழைய நண்பர் அல்லது அறிமுகமானவர்களுடன் சந்திப்பு ஏற்பட்டும். அது மனதிற்கு மகிழ்ச்சியும், புதிய வாய்ப்பையும் ஏற்படுத்தும். இன்று உங்கள் குடும்பத்தில் ஒருவரின் உடல்நிலை குறித்து கவலை ஏற்படலாம்.

இன்று உலக இன்பங்கள் அதிகரிக்கும். இது குடும்பத்தில் மகிழ்ச்சியையும், திருப்தியையும் தரும்.
புதிய வேலை வாய்ப்புகள் அமையும். திருமண வாழ்க்கையின் இனிமையான மற்றும் மகிழ்ச்சிகரமான தருணங்கள் அமையும்.

துலாம்
இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு வேலை அழுத்தம் அதிகமாக இருக்கும். வேலைக்காக அதிக நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும். இன்று நீங்கள் சட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்த விஷயத்திலும் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். அது எதிர்காலத்தில் உங்களை சிக்கலில் ஆழ்த்தலாம். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் வர வாய்ப்புள்ளது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று மனதளவில் குழப்பத்துடன் இருப்பார்கள். உங்களின் அவசர முடிவுகளால் நீங்கள் பாதிக்கப்படலாம், எனவே நீங்கள் எடுக்கும் எந்த முடிவையும் தீவிரமாக யோசித்து எடுக்கவும்.

மாலையில் உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வருகை மகிழ்ச்சியைத் தரும். இன்று உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்று உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். குழந்தை வழியில் மகிழ்ச்சி அடைவீர்கள்.

தனுசு
இன்று, தனுசு ராசியினருக்கு கலவையான நாளாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர் அல்லது மனைவியின் ஆரோக்கியத்தில் குறை ஏற்படலாம். இதன் காரணமாக நீங்கள் மன உளைச்சலை உணருவீர்கள். உங்கள் பணம் ஆரோக்கிய விஷயத்திலும் அதிகம் செலவிட வாய்ப்புள்ளது. மாலையில், சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புள்ளது. இன்று பண பரிவர்த்தனை விஷயங்களில் கவனம் தேவை. இல்லையேல் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். இன்று நீங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒன்றைச் செய்யலாம். வியாபாரத்தில் சிறப்பாக சம்பாதிக்க வாய்ப்புகள் உண்டு. இன்றைய நாள் சாதகமாக இருக்கும்.

இன்று உங்களுக்கு சில பரிசும், மரியாதையும் கிடைக்கும். வணிகத்தில் நன்கு யோசித்த பின் திட்டங்களை செயல்படுத்தவும், முதலீடு செய்வதும் நல்லது. இன்று எந்த ஒரு விஷயத்திலும் திருப்திகரமான பலன்களைப் பெறுவீர்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று குடும்ப விஷயங்களில் குழப்பம் ஏற்படலாம். இன்று நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் பணிச்சுமை அதிகமாக இருக்கும். வேலை தொடர்பாக, பயணம் செல்ல வாய்ப்புள்ளது. பயணத்தின் போது எச்சரிக்கையாக இருக்கவும்.

குடும்ப வாழ்க்கையில் அன்பும், நல்லிணக்கமும் ஏற்படும். மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வாய்ப்புகள் கிடைக்கும்.
நெருங்கியவர்களுடன் கோபப்பட வாய்ப்புள்ளது. குழந்தைகள் தொடர்பாக, தொழில், ஆரோக்கியம் சார்ந்து சற்று கவலை ஏற்படலாம்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று வீட்டிலும் மற்றும் பணியிடத்திலும் முக்கிய பணிகளை முடிக்க மும்முரமாக செயல்படுவீர்கள். சில சுப காரியங்கள் மற்றும் ஆன்மிக விஷயங்களில் ஈடுபடுவீர்கள். இன்று எந்த விஷயத்திலும் உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும் துணையையும் பெறுவீர்கள்.

மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட முடியும். வேலையில் மாற்றம் அல்லது புதிய வேலையை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். நிதி விஷயங்களில், இன்று உங்களுக்கு லாபம் தருவதோடு, செலவும் ஏற்பட வாய்ப்புள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 08 மே 2025 – Daily Horoscope

Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (மே 8, 2025 வியாழக் கிழமை) இன்று சந்திரன்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 07 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 7.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23, புதன் கிழமை, சந்திரன் சிம்மம்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 06 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 6.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 செவ்வாய்க் கிழமை, சந்திரன் சிம்மம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...