செப்டம்பர் மாதத்தில் மேஷம் ராசியில் துவங்கி மீனம் ராசி வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான இராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்
மேஷம்
மேஷ ராசியினைப் பொறுத்தவரை குரு 12 வது இடத்தில் இருப்பதால் சுப விரயங்கள் ஏற்படும், ரிஷபத்தில் செவ்வாய் இருப்பதால் ஆரோக்கியம் ரீதியாக கடந்த மாதங்களில் சந்தித்த பிரச்சினைகளில் இருந்து மீள்வீர்கள்.
செவ்வாய் பகவான் உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாது மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவார். சுக்கிரன் – சூரியன் சேர்க்கை இருப்பதால் நற்பலன்கள் கிடைக்கப் பெறும். சனி பகவான் உச்சமடைந்து வக்கிரம் அடைவார்.
வேலை மாற்றம், தொழில் அபிவிருத்தி, புதிய தொழில் துவங்குதல் என எந்தவொரு புதிய முயற்சியினையும் செய்ய வேண்டாம். பெரிய மாற்றங்களுக்கு உகந்த மாதமாக நிச்சயம் இது இருக்காது திருமண சார்ந்த காரியங்கள்.
செவ்வாய் இரண்டாம் இடத்தில் இருப்பதால் வீடு, மனை வாங்குதல் வண்டி, வாகனம் வாங்குதல் போன்றவற்றிற்கு உகந்த மாதமாக இருக்கும். மேலும் பூர்விகச் சொத்துகள் ரீதியாக பாகப் பிரிவினை செய்யக் காத்திருந்தவர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கப் பெறும்.
குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சேமிப்புகள் துவங்குவதற்கு ஏற்ற காலகட்டமாகும். கணவன் – மனைவி இடையே மனக் கசப்புகள் ஏற்படும், ஆனால் அது தானாகவே சரியாகிவிடும்.
சுக்கிரன் வலுவாக இருப்பதால் செப்டம்பர் 24 ஆம் திகதிக்குள் வரன்கள் அமையப் பெறும். குழந்தை பாக்கியம் குறித்து எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு ஐந்தாம் இடத்தில் சூரியன் இருப்பதால் செப்டம்பர் 17 ஆம் திகதிக்குள் சாதகமான பலன்களைக் கிடைக்கும்.
6 இல் புதன் இருப்பதால் குழந்தைகள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ரிஷபம்
ரிஷப ராசி ரிஷப லக்னத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் உகந்த காலகட்டமாகும். குரு பகவான் 11 ஆம் இடத்திலும் சனி பகவான் மகரத்திலும் இருப்பதால் ராகு – கேது 12 ஆம் மற்றும் 6 ஆம் இடத்திலும் இருப்பதால் அனுகூலம் நிறைந்த காலகட்டமாகவே இருக்கும்.
வேலைரீதியாக தற்போது இருக்கும் வேலையில் பாராட்டுகள் கிடைக்கப் பெறும், புதிதாக வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கப் பெறும்.
புதன் 10 ஆம் திகதிவரை உச்சத்தில் இருப்பதால் தொழில்ரீதியாக தொய்வுகள் இல்லாத மாதமாக இருக்கும், புதன் 11 ஆம் தேதிக்குப் பின் வக்கிரம் அடைந்தாலும் தொழில்ரீதியாக ஆதாயங்கள் கிடைக்கப் பெறும்.
நீங்கள் பல மாதங்களாக நிறைவேறாமல் காத்திருந்த விஷயங்கள் இனி நடக்கப் பெறும். திருமணம் சார்ந்த காரியங்களுக்காக எதிர்பார்த்து இருப்போருக்கு வரன்கள் கைமேல் கிடைக்கப் பெறும், விறுவிறுவென திருமண ஏற்பாடுகள் நடக்கப் பெறும்
காதல் திருமணங்களுக்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது கணவன் – மனைவி இடையேயான அன்பு அதிகரிக்கும், சூரியன் 4 ஆம் இடத்தில் இருப்பதால் வண்டி, வாகனங்கள் வாங்குவதற்கு ஏற்ற காலகட்டமாக இருக்கும்.
மேலும் வீடு சார்ந்த புதுப்பித்தல் வேலைகள் நடக்கப் பெறும். மேலும் நீண்டநாட்களாக நீங்க வாங்க நினைத்திருந்த வீட்டிற்குத் தேவையான புது பொருட்கள் வாங்குவீர்கள்.
சகோதரர்களின் உதவிகள் கிடைக்கப் பெறும் மாதமாக உள்ளது. சனி வக்கிரம் அடைந்து இருப்பதால் மாணவர்கள் கல்விரீதியாக மேம்பட்டுக் காணப்படுவார்கள்.
கடகம்
கடக ராசியின் குரு பகவான் 9 ஆம் இடத்தில் வக்கிரமடைந்தும், சனி பகவான் 7 ஆம் இடத்திலும் உள்ளனர். சூரியன் 2 ஆம் இடத்திலும், சுக்கிரன் 10 ஆம் இடத்திலும், செவ்வாய் 11 ஆம் இடத்திலும், 3 ஆம் இடத்தில் புதன் என அனைத்துக் கோள்களும் அற்புதமான இடத்தில் உள்ளனர்.
செப்டம்பர் 24 ஆம் திகதிவரை எந்தவொரு தங்கு தடையும் இல்லாமல் எடுத்த காரியங்கள் துலங்கும் மாதமாக இருக்கும். வேலை வாய்ப்புரீதியாக வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு ஏற்ற மாதமாக இருக்கும்.
மேலும் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த உயர் பதவி, இடமாற்றம், சம்பள உயர்வு என அனைத்தும் கிடைக்கும் மாதமாக இருக்கும். திருமணம் சார்ந்த காரியங்கள் தங்கு தடையின்றி வரன் பார்த்தலில் துவங்கி திருமணம் வரை சுமுகமாக நடக்கப் பெறும்.
குடும்ப வாழ்க்கையில் கணவன் – மனைவி இடையே பெரிய அளவில் பிரச்சினைகள் கிடையாது. கிரகங்களின் பார்வை, கிரகங்களின் சேர்க்கை நற்செய்தியினைக் கொடுக்கும் மாதமாக இருக்கும்.
உற்றார் – உறவினர்களின் ஆதரவும், நண்பர்களின் உதவிகள் கிடைக்கப் பெறும். உடன் பிறப்புகளுக்குள் இருந்த மனக் கசப்புகள் நீங்கி அன்பு பாராட்டும் மாதமாக இருக்கும்.
காதல் திருமணம், கலப்புத் திருமணம் செய்வோருக்கு ஏற்ற மாதமாக இருக்கும். நேர்மறையான மற்றும் மகிழ்ச்சியான எண்ணங்களால் மன நிறைவுடன் காணப்படுவீர்கள்.
வெளிநாடுகளில் படிக்க முயற்சிக்கும் மாணவர்களுக்கு அனுகூலமான மாதமாக இருக்கும். வீடு, மனை வாங்குதல் நடக்கப் பெறும். பூர்விகச் சொத்துகள் மற்றும் வழக்கு சார்ந்த சாதகமான முடிவுகள் கிடைக்கப் பெறும்.
சிம்மம்
6 ஆம் இடத்தில் சனி வக்ரம், 8 ஆம் இடத்தில் குரு வக்ரம், 2 ஆம் இடத்தில் புதன் வக்ரம், சிம்மத்தில் சூரியனும் சுக்கிரனும், செவ்வாய் 10 ஆம் இடத்திலும், 9 ஆம் இடத்தில் ராகு உள்ளது.
கிரகங்களின் இடம் சிம்மத்திற்கு உகந்த மாதமாக இருக்கும். சூரியன் ஆட்சியில் இருப்பதால் 17 ஆம் திகதி வரை நீங்கள் மகிழ்ச்சியுடனும் பலம் மிகுந்து காணப்படுவீர்கள்.
வேலைவாய்ப்பு ரீதியாக எடுக்கும் புதிய முடிவுகள் அனைத்தும் வெற்றியினைக் கொடுக்கும். பதவி உயர்வு, வேலை ரீதியாக பாராட்டுகள், வேலையில் பளு குறைந்து காணப்படுவதால், சம்பள உயர்வு என அமோகமாக வாழ்க்கை இருக்கும்.
குடும்ப வாழ்க்கை என்று கொண்டால் கணவன் – மனைவி இடையே கார சாரமான விவாதங்கள் சண்டைக்கு இட்டுச் சென்றாலும் சிங்கம்போல் கர்ஜித்து பிரச்சினையைக் கையாள்வீர்கள்.
திருமண காரியங்களைப் பொறுத்தவரை வரன்கள் குறித்த தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். குழந்தைகள் கல்வி நலனில் மேம்பட்டுக் காணப்படுவார்கள்.
காதலர்கள் மத்தியில் தேவையில்லாத சண்டை ஏற்படும், மேலும் பணம் கொடுக்கல் வாங்கலில் பல பிரச்சினைகள் சந்திக்க நேரிடும். தாய் தந்தை வழியான பூர்விகச் சொத்துகள் கிடைக்கப் பெறும். மேலும் தாய், தந்தை உறவினர்கள் ரீதியாக பண உதவிகள் கிடைக்கும்.
கன்னி
கன்னி இராசியில் புதன் உச்சம் மற்றும் வக்கிரம் அடைந்து காணப்படுவார், சூரியன் 12 ஆம் இடத்திலும், செவ்வாய் 9 ஆம் இடத்திலும் உள்ளது.
குருபகவான் பார்வை கன்னியின் மேல் விழுகின்றது, தொழில்ரீதியாக வேலை மாற்றம், புதிய வேலை, இடமாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு என எதையும் எதிர்பார்க்க வேண்டாம். இருக்கும் வேலையினை தக்க வைத்துக் கொள்வது நல்லது.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போல் பல விஷயங்கள் கையில் இருந்து நழுவிப் போகும். திருமண ஏற்பாடுகள் விறுவிறுவென நடக்கப் பெறும், சுப விரயச் செலவுகள் ஏற்படும்.
பணப் பிரச்சினைகள் ஏற்படும், உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் குறைந்து காணப்படுவீர்கள். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே மனக் கசப்புகள் ஏற்படும்.
அதிக அளவில் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். மிகவும் மனக் குழப்பத்துடன், பயத்துடனும் காணப்படுவீர்கள். எடுக்கும் புதுக் காரியங்கள் பலவும் தடையாகும், மாணவர்களைப் பொறுத்தவரை கல்வி நலன், உடல் நலனில் மேம்பட்டுக் காணப்படுவீர்கள்.
குடும்பத்தில் கோபப்படாமல் அனுசரித்துச் செல்வது நல்லது, ராகு 8 ஆம் இடத்தில் இருப்பதால் உடல் ஆரோக்கியம் ரீதியாக வீண் மருத்துவச் செலவுகள் ஏற்படும். குல தெய்வக் கோவிலுக்குச் சென்று வருதல் மனதைரியத்தைக் கொடுக்கும்.
துலாம்
துலாம் இராசியினைப் பொறுத்தவரை சூரியன் 11 ஆம் இடத்திலும், செவ்வாய் 8 ஆம் இடத்திலும், புதன் 12 ஆம் இடத்திலும், குரு பகவான் 6 ஆம் இடத்திலும், சனி பகவான் 4 ஆம் இடத்திலும் உள்ளது.
இராகு- கேது ஜென்மத்தில் கேது, 7 ஆம் இடத்தில் ராகு உள்ளது. சனி பகவான் தொழில்ரீதியாக மன உளைச்சல்கள், மன அழுத்தங்களைக் கொடுப்பார்.
வேலை மாற்றம், இடமாற்றம், பதவி மாற்றம் என பல மாற்றங்களை எதிர்பார்த்து இருப்பீர்கள். வேலைசார்ந்து உயர் அதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம், அது பெரும் பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லும்.
எதையும் கண்டும் காணாததுபோல் பொறுமையுடன் செயல்படுங்கள். ஆழ்ந்து யோசித்து மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள். பெரும் முயற்சிகள், மாற்றங்கள் என எதையும் எதிர்பார்க்காதீர்கள், குடும்பத்தில் கணவன் – மனைவி இடையே பெரும் பிரச்சினைகள் ஏற்படும்.
காதலர்கள் மத்தியில் வெறுப்புணர்ச்சி அதிகரிக்கும் கோபங்கள் ஏற்படும். பிரச்சினைகள் குறித்து கிளறிப் பேசாமல் இருத்தல் நல்லது. திருமணம் சார்ந்த காரியங்கள் தள்ளிப் போகும், குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து இருப்போருக்கும் மோசமான காலமாக இருக்கும்.
விருச்சிகம்
செவ்வாய் பார்வையில் விருச்சிகமும், ராகு – கேது 6 மற்றும் 8 வது இடங்களிலும் உள்ளது. 5 ஆம் இடத்தில் குரு வக்கிரம், 3 ஆம் இடத்தில் சனி வக்கிரம், 10 ஆம் இடத்தில் சூர்யன்- சுக்கிரன், 11 ஆம் இடத்தில் புதன் உள்ளது.
கோள்களின் இட அமைவு விருச்சிகத்திற்கு மிகவும் சாதகமாக உள்ளது. வேலைவாய்ப்பு ரீதியாக பதவி உயர்வு, சம்பள உயர்வு, எதிர்பார்த்திருந்த இடமாற்றம் என வேலைசார்ந்த விஷயங்களில் மன நிறைவுடன் காணப்படுவீர்கள்.
தொழிலில் பணப் புழக்கம் அதிகமாகவே இருக்கும், அபி விருத்தி செய்யும் திட்டம் இருந்தால் சிறிதும் தயங்காமல் செய்யவும். திருமணம் சார்ந்த விஷயங்களில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி வரன்கள் கைகூடிவரும்.
குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன் – மனைவி இடையேயான அன்பு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் பெருமை சேர்க்கும் அளவு சிறந்து விளங்குவர்.
மேலும் வீடு, மனை வாங்க நினைப்போருக்கு கைமேல் பலன் கிடைக்கும் காலமாக இருக்கும். வண்டி, வாகனங்கள் வாங்குவதற்கான அனுகூலங்கள் உண்டு. பூர்விகச் சொத்துகள் வீடு தேடி வந்து சேரும்.
பழைய கடன்களை அடைப்பீர்கள், உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் சரியாகி, சுமுகமான உறவு தொடரும். உடல் ஆரோக்கியம் ரீதியாக மேம்பட்டுக் காணப்படுவீர்கள்.
தனுசு
2 ஆம் இடத்தில் சனி, 6 ஆம் இடத்தில் ராகு, 11 ஆம் இடத்தில் கேது, சூரியன் – சுக்கிரன் 9 வது இடத்தில், செவ்வாய் 6 ஆம் இடத்தில், புதன் 10 ஆம் இடத்தில் உள்ளது.
வேலைவாய்ப்பு ரீதியாக அடுத்த கட்டத்திற்கு நோக்கிச் செல்லும் முயற்சியில் களம் இறங்குவீர்கள். அதேபோல் தொழில் ரீதியாக புதுத் திட்டங்கள் தீட்டி தொழிலை அபிவிருத்தி செய்யும் முயற்சியில் களம் இறங்குவீர்கள்.
திருமண காரியங்கள் செய்ய நினைப்போருக்கு உகந்த காலகட்டமாகும், மேலும் வேலைக்குச் செல்லும் பெண்களை எதிர்பார்த்து இருந்தோருக்கு மிகவும் பொருத்தமான வரன்கள் அமையப் பெறும்.
குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன் – மனைவி இடையே கசப்பான மனப்பாங்கு நிலவும். ஏமாற்றங்கள் உங்களுக்கு மன அழுத்தத்தினைக் கொடுக்கும்.
மாணவர்களுக்கு சாதகமான மாதமாக உள்ளது, நினைத்தது நிறைவேறும் மாதமாக இருக்கும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும், மேலும் உடல் ஆரோக்கிய ரீதியாக விரயச் செலவுகள் ஏற்படும்.
மகரம்
மகரம் ஏழரை சனி, மகரத்திலேயே சனி, மூன்றாம் இடத்தில் குரு, செவ்வாய் ரிஷபத்தில், சுக்கிரன் 8 ஆம் இடத்தில், புதன் 9 ஆம் இடத்தில், ராகு 4 ஆம் இடத்தில், கேது 10 ஆம் இடத்தில் என கோள்களின் இட அமைவு உள்ளது.
வேலைவாய்ப்பு ரீதியாக புது முயற்சிகள் எடுக்காமல் இருக்கும் வேலையினைத் தக்க வைத்துக் கொள்தல் நல்லது. வேலைப்பளு, வேலைசார்ந்த மன அழுத்தம், கோபம் என பலவிதமான மனநலம் சார்ந்த பிரச்சினைக்கு ஆளாவீர்கள்.
தொழில்ரீதியாக அபிவிருத்தி செய்வதை சிறிது காலம் தள்ளி வைத்தல் நல்லது. திருமண காரியங்களில் காலதாமதம் இருக்கும், பொறுமையுடன் கையாள்தல் வேண்டும்.
குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே உறவினர்களால் பிரச்சினைகள் ஏற்படும், இது உறவில் விரிசல் அளவுக்குக் கொண்டு செல்லும். மேலும் குழந்தைப் பேற்றிற்காக எதிர்பார்த்துக் காத்திருப்போருக்கு தாமதம் ஏற்படும் மாதமாக இருக்கும்.
மாணவர்கள் எதிர்காலம் குறித்து மனக் கவலையில் இருப்பார்கள், ஆனால் இதுபோன்ற கவலை கொள்ளாமல் படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துதல் நல்லது. சனி பகவான் மாணவர்களை சோதிப்பார், மேலும் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் என அனைத்தும் வலுவிழந்து காணப்படும்.
வண்டி, வாகனங்களை தற்போதைக்கு வாங்குவதைத் தவிர்க்கவும். மேலும் வெளியூர்ப் பயணங்கள், இரவு நேரப் பயணங்களில் கவனம் தேவை. பொறுமை, நிதானம், சகிப்புத் தன்மை, அமைதி போன்றவையே பிரச்சினைகளை ஓரளவு கடக்க உதவும்.
கும்பம்
2 ஆம் இடத்தில் குரு வக்கிரம், 4 ஆம் இடத்தில் செவ்வாய் வக்கிரம், 12 ஆம் இடத்தில் சனி, 3 ஆம் இடத்தில் ராகு, 7 ஆம் இடத்தில் சூர்யன்- சுக்கிரன், 8 ஆம் இடத்தில் புதன் உள்ளது.
வேலைவாய்ப்பு ரீதியாக புது முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருக்கும் வேலையினைத் தக்க வைத்துக் கொள்தல் நல்லது. வேலைப் பளு உங்களை மன அழுத்தத்திற்கு இட்டுச் செல்லும்,
தொழில்ரீதியாக லாபம் பெரிதளவில் இருக்காது, நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. புதிதாகத் தொழில் துவங்க ஏற்ற மாதம் கிடையாது.
பணப் புழக்கம் பெரிதளவில் இருக்காது, கடன் வாங்குவதற்கான அபாயங்கள் அதிகம் உள்ளது. குடும்ப உறவினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான உறவு சுமாராகவே இருக்கும்.
திருமணம் சார்ந்த காரியங்கள் செய்ய நினைப்போர், தாமதிக்காமல் செய்து முடிக்கலாம். வண்டி, வாகனங்கள் நினைப்போர் தற்போதைக்கு பிளானைத் தள்ளி வைக்கவும். அப்படி வாங்க நினைப்போர் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாங்கவும்.
வீடு, மனை வாங்க நினைப்போர் 17 ஆம் தேதிக்குப் பின் வாங்கலாம். காதலர்களுக்குள் மனப் போராட்டம் இருக்கும். மாணவர்கள் வெளிநாடுகள், வெளியூர்களுக்குச் சென்று படிக்க எண்ணி இருந்தால் உங்கள் எண்ணம் ஈடேறும்.
உடல் ஆரோக்கியம் குறைந்து காணப்படும், மிகவும் கவனத்துடன் செயல்படுதல் நல்லது. வண்டி வாகனங்களில் பயணிக்கும்போது கவனத்துடன் செயல்படவும்.
மீனம்
ஜென்மத்தில் குரு வக்ரம், 2 ஆம் இடத்தில் ராகு, 11 ஆம் இடத்தில் சனி வக்ரம், 7 ஆம் இடத்தில் புதன் வக்ரம், 3 ஆம் இடத்தில் செவ்வாய், 6 ஆம் இடத்தில் சுக்ரன் – சூர்யன் என கோள்கள் அமைவு சுமாரானதாக உள்ளது.
வேலைவாய்ப்பு ரீதியாக புது முயற்சிகள் எடுக்கலாம், உயர் பதவிக்குச் செல்லத் தேவையான முயற்சிகளில் களம் இறங்கலாம். தொழில்ரீதியாக முன்னேற்றம் காணப்படும், ஆதாயப் பலன்கள் நீங்கள் நினைத்ததைவிட அதிகமாக இருக்கும்.
திருமண காரியங்களைப் பொறுத்தவரை வரன்கள் கிடைக்கப் பெறும். குடும்பத்தில் கணவன் – மனைவி இடையேயான உறவு உறவினர்களால் விரிசல் ஏற்படும்.
காதலர்களுக்கு இடையேயான கலப்புத் திருமணங்கள் நிறைவேறும். பொறுப்புகள் நிறைந்த மாதமாக இருக்கும். தாய் வழி தந்தை வழி உறவு ரீதியாக பணரீதியான உதவிகள் கிடைக்கும், மாணவர்கள் கல்விரீதியாக புது முயற்சிகள் செய்யலாம்.
ராகு- கேதுவின் இட அமைவு உடல் ஆரோக்கியத்தில் கோளாறினை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துதல் நல்லது.
மேலும் பேசும் வார்த்தைகளிலும் கூடுதல் கவனமாக இருந்தால் மட்டுமே பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
#Astrology
Leave a comment