ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (24.05.2022)

Share
WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 14
Share

Medam

medam

குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனத் துணிவுடன் பெண்கள் காரியம் ஆற்றுவார்கள்.

வியாபாரத்தில் ஏற்பட்ட வில்லங்கங்களை விலக்க முயற்சிப்பீர்கள். புதிய நண்பர்களிடம் தொழில் ரகசியங்களைக் கூறாதீர்கள்.

புதிய ஆர்டர்கள் பெறுவதற்கான முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். தொழில் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகள் வசூலாகும்.

 

Edapam

edapam

எதிர்பார்ப்புடன் இருந்த காரியம் ஏமாற்றத்தைத் தரும். கலைத்துறையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

கணினி வியாபாரம் சிறப்பாக இருக்கும். பணியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். பிள்ளைகளின் நடவடிக்கை பெற்றோருக்கு மனச் சங்கடத்தைத் தரும்.

சிறு வியாபாரிகள் சிறப்பான லாபம் பெறுவார்கள். கணவன்-மனைவிக்கிடையே திடீர் இடைவெளி ஏற்படும்.

                                                                                                                                   

 

                                                                                                                                   Mithunam

mithunam

நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு கிடைக்கும். தொந்தரவு கொடுத்து வந்த நோய் விலகும்.

இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். அலைச்சல் அதிகம் ஆனாலும் புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள்.

நிலம் வாங்கி விற்கும் வியாபாரம் சிறப்பாக நடக்கும். மனம் விட்டுப் பேசினால் கணவன்-மனைவிக்கிடையே இடைவெளி குறையும்.

                                                                                                                        Kadakam

kadakam

 

வலியச் சென்று வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்கள். விருப்பமில்லாத இடத்திற்கு மாறுதல் செய்யப்படலாம்.

பிள்ளைகளின் கல்வி எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறீர்கள். வாடிக்கையாளர்களுக்கு சரக்குகள் அனுப்புவதில் தாமதம் ஏற்படும்.

குடும்பத்தில் இணக்கமான சூழ்நிலை காணப்படும். அரசியல்வாதிகள் கவனமாகப் பேச வேண்டும். அறிவுத்திறன் அதிகரிக்கும்.

 

                                                                                                                   simmam

 

simmam

தாமதமாக கிடந்த காரியங்கள் ஜெட் வேகத்தில் நடக்கும்.புதிய வீடு கட்டுவீர்கள். பழைய வீட்டைப் புதுப்பிப்பீர்கள். காண்ட்ராக்ட் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

வங்கி லோன் பெறுவீர்கள். வெளிநாட்டிலிருந்து பணம் உதவி வந்து சேரும். சிறு வியாபாரிகள் இது யோகமான நாள்.

கட்டிடத் தொழிலாளர்கள், எலக்ட்ரீசியன்கள் கடின வேலையால் அதிக லாபம் பார்ப்பார்கள்.

                                                                                                            Kanni

kanni

அடுத்தவர் பிரச்சனைக்கு தீர்வு சொல்வீர்கள். ஆனால், உங்கள் விஷயத்தில் கோட்டை விடுவீர்கள்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாகத் தெரியும்‌ சாமர்த்தியமாக நடந்து குடும்ப விவகாரங்களைச் சரி செய்வீர்கள்.

ஒன்றாக வேலை செய்பவரிடம் சண்டை போடாதீர்கள். உறவினர்கள், நண்பர்களிடம் தேவையில்லாத சச்சரவு உண்டாகும்.

 

                                                                                         Thulaam

thulaam

பணியாளர் பற்றாக்குறையால் கூடுதல் பொறுப்பு உங்கள் தலையில் விழும். வியாபாரம் மந்த நிலையில் இருக்கும்.

தொழிற்சாலையில் மின்சாரத் தடையால் உற்பத்தி பாதிக்கப்படும். குறிப்பிட்ட மாணவர்களுக்கு தேர்வு தள்ளிப்போகும்.

பெண்கள் கணவனுக்கு உதவியாக இருப்பார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும்.

                                                                                           

                                                                                                            Viruchchikam

viruchchikam

சகோதர வகையில் உதவிகள் தள்ளிப் போகலாம். ஆடை ஆபரணங்கள் மீது பெண்களுக்கு ஆசை அதிகரிக்கும்.

கணினித்துறை அபார வளர்ச்சி அடையும். நிலம் வாங்கி விற்பது லாபத்தைக் கொடுக்கும்.

வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். உடல் சோர்வு உண்டாகும். சிலருக்கு வயிற்றுக் கோளாறு ஏற்படலாம். தொழிலை விரிவுபடுத்த அதிக பணம் செலவிடுவீர்கள்.

 

Thanusu

thanusu

சிறு வியாபாரிகள் கூடுதலான லாபம் பெறுவார்கள். அரசுப்பணியாளர்களை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் வெற்றிக்கு வாழ்க்கைத் துணை பெரிதும் உதவியாக இருப்பார்.

மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றிகண்டு வியாபாரத்தில் வேகம் காட்டுவீர்கள். ஆன்லைன் வர்த்தகத்தில் நல்ல வருமானம் பெறுவீர்கள்.

Maharam

magaram

திருமணம் தொடர்பான காரியங்கள் தடையில்லாமல் நடக்கும். தவறாகப் புரிந்து கொண்டு நண்பர்களைக் காயப்படுத்தி விடாதீர்கள்.

உதவி செய்வதன் மூலம் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கை உயர்த்துவீர்கள். பார்ட்னர்ஷிப் பத்திரங்களில் கவனமாக கையெழுத்து இடுங்கள்.

மனக்குழப்பம் நீங்கி மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவார்கள். பணப்பற்றாக்குறை இருக்காது.

 

Kumbam

kumbam

வியாபாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். அரசு வேலையில் தவறான குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம்.

சூழ்நிலையைப் புரிந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். தனியார் துறையில் வீண் அலைச்சலும் டென்ஷனும் அதிகரிக்கும்.

வெளியூர்ப் பயணங்களை தள்ளி வைப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக் கிடைக்கும். சந்திராஷ்டம நாள். நிதானம் தேவை.

Meenam

meenam

குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு புதிய நட்பு கைகொடுக்கும்.

மாணவர்கள் பாதியில் நிறுத்திய கல்வியைத் தொடர்வார்கள். அலைச்சல் அதிகமானாலும் புதிய ஆர்டர்கள் பெறுவதில் வெற்றி காண்பீர்கள்.

ஆன்-லைன் விளையாட்டுகளில் எச்சரிக்கையாக இருங்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

#Astrology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 06 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 6.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 செவ்வாய்க் கிழமை, சந்திரன் சிம்மம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 02 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 2.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 19, வியாழக் கிழமை, சந்திரன் மிதுனம்...