Medam

நிதானத்துடன் செயற்பட வேண்டிய நாள். உறவினர்களால் மன உளைச்சலுக்கு உள்ளாகுவீர்கள். செய்யும் தொழிலில் நிதானத்துடனும் கவனத்துடனும் செயற்படுவது நல்லது.
வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணங்களில் அவதானத்துடன் செயற்படுங்கள்.
Edapam

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப காரியங்கள் கைகூடும் நாள். பிள்ளைகளால் உற்சாகம் அதிகரிக்கும்.
ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வேர்கள். வியாபாரம் சிறப்பாக இருக்கும், பணப்புழக்கம் அதிகரிக்கும்.
Mithunam

திடீர் பண வரவு கிடைக்கும். உறவினர்களால் சுபச் செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள் இழுபட்ட கடன் பிரச்சினை முடிவுக்கு வரும்.
உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்களால் நன்மை கிடைக்கும்.
Kadakam

மனதில் உற்சாகம் மேலோங்கும். சுறுசுறுப்பாக செயற்படுவீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.
உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். திடீர் செலவுகள் ஏற்படும்.
Simmam

மனதில் அமைதியின்மை ஏற்படும். வியாபாரத்தில் சிறிய நட்டம் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்தினர் உதவியால் மகிழ்ச்சியடைவீர்கள்.
பெற்றோர் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். சச்சரவுகளைத் தவிர்த்துக்கொள்வது பிரச்சினைகளைத் தவிர்க்கும்.
Kanni

உடல் ஆரோக்கியம் சிறக்கும், மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் கிடைக்கும்.வியாபாரத்தில் புதியவர்கள் அறிமுகத்தால் நன்மை கிடைக்கும்.
நீண்ட நாள்களாக இழுபட்ட சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நல்ல செய்திகள் தேடி வரும்.
Thulaam

பண வரவு அதிகரிக்கும். இழுபட்ட சுப காரியங்கள் கைகூடும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும்.
குடும்பத்தாரை அனுசரித்து செல்வது சிறந்தது. மனதில் நிம்மதி கிடைக்கும்.
Viruchchikam

தொழிலில் இருந்த எதிர்ப்புக்கள் நீங்கும். வெளியூர் பயணம் செல்வீர்கள். பொருளாதாரம் சிறக்கும். நண்பர்களுடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
மனதில் அமைதி கிடைக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த உதவிகள் கைகூடும்.
Thanusu

நினைத்த காரியம் கைகூடும், பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் செலுத்துவீர்கள்.
உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும்.
Maharam

திட்டமிட்ட ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களால் மகிழ்ச்சி கிடைக்கும். மனதில் அமைதி கிடைக்கும்.
அயலவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கடன் தொல்லை தீரும்.
Kumbam

கடன் கொடுத்த பணம் வசூலாகும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். புதியவர்கள் அறிமுகத்தால் மனதில் உற்சாகம் ஏற்படும்.
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
Meenam

செலவுகள் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல எதிர்பாத்து காத்திருந்தோருக்கு நல்ல செய்தி வந்து சேரும். பெற்றோர் உடல்நலனில் அவதானம் செலுத்துங்கள்.
பிள்ளைகளால் நல்ல செய்தி கிடைக்கும். கணவன் – மனைவியிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
#Astrology
Leave a comment