ஜோதிடம்
கிருத்திகை விரதமும் தீரும் பிரச்சினைகளும்
கிருத்திகை விரதமும் தீரும் பிரச்சினைகளும்
முருகப் பெருமானை வணக்குவதற்கு சிறந்த ஒரு நாளாக ஆவணி கிருத்திகை தினம் காணப்படுகிறது.
இந்தத் தினத்தில் விரதமிருந்து வழிபட்டால் முருகனின் அருளாற்றல் அனைவருக்கும் கிடைக்கும்.
ஆவணி மாதத்தில் வருகின்ற கிருத்திகை தினத்தில் விரதம் மேற்கொள்வதால் தோஷங்கள் நீங்கி அருளும் கிடைக்கப்பெறும்.
இந்தத் தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.பின்னர் பூஜையறையில் பூக்கள் வைத்து, தீபம் ஏற்றி காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் இருந்து முருகன் ஆலயம் சென்று வழிபட்ட பின்பு பால், பழம் சாப்பிட்டு கிருத்திகை விரதத்தை முடித்துவைக்க வேண்டும்.
ஆவணி மாத கிருத்திகை வழிபாடு மேற்கொள்வதால் சூரிய கிரக தோஷங்களும் நீங்கப்பெறும். எதிரிகளின் தொல்லை, காரியங்களில் தடை, தாமதங்கள் நீங்கும்.
6 கார்த்திகைப் பெண்கள் கந்தனை பாலூட்டி வளர்த்து கந்தனுக்கு தாய் என்ற சிறப்பை பெற்றனர். அத்துடன் அவர்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல் நீங்கி சகல செல்வ வளங்களையும் பெற்று வாழ்வர் என கூறப்படுகிறது.
மேலும் இந்தத் தினத்தில் முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளை பெற்று சிறந்து வாழ்வர்.
You must be logged in to post a comment Login