இன்றைய ராசி பலன் 20.09.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசிபலன் ஜூன் 20, 2024, குரோதி வருடம் ஆனி 6, வியாழக் கிழமை, சந்திரன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியில் உள்ள அஸ்வினி, பரணி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் யாரிடமும் எதிர்ப்பு காட்டுவது அல்லது வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று எதிலும் கடின உழைப்பு தேவைப்படும். வணிகம் சார்ந்த விஷயத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் போது அனுபவசாலிகளிடம் ஆலோசனையும், சிந்தித்தும் செயல்படவும். குடும்ப உறவுகளில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. இன்று எந்த ஒரு செயலிலும் நல்ல வெற்றியை பெற வாய்ப்புள்ளது.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் வேலைகள் அனைத்தும் சீராக நடக்கும். அதிர்ஷ்டத்தின் மூலம் நிதி நன்மைகளை பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் படிப்பு விஷயத்தில் நல்ல செய்திகளை கேட்பீர்கள். காதலில் நெருக்கம் அதிகரிக்கும். பழைய கடன் பிரச்சனைகளில் இருந்து மீள வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். இன்று சகோதர, சகோதரிகளின் அன்பை பெறுவீர்கள்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் சில தவறான புரிதல்கள் ஏற்படும். காதல் விஷயத்தில் கவனம் தேவை. தனிப்பட்ட உறவுகளில் மனசங்கடங்கள் ஏற்பட நேரிடும். இன்று உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். சமூகத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். இன்று இலக்குகளை அடைய கடின உழைப்பு தேவைப்படும். கடினமான நேரத்தில் அனுபவங்கள் உங்களுக்கு உதவும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கேட்பீர்கள்.
ராகுவின் பிடியில் சுக்கிரன்: அடுத்த இரு வாரத்திற்கு வாரி வழங்கும் சுக்கிரன்
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் வெற்றியை அடைவதற்கான ஊக்கத்தைப் பெறுவீர்கள். உங்கள் பிள்ளைகளின் வேலை, தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று உங்களின் எதிர்காலம் தொடர்பான விஷயத்தில் அக்கறை காட்டுவீர்கள். வியாபாரத்தில் நிபுணர்களின் ஆலோசனை பெற்று முதலீடு செய்யவும். உங்களின் வருமானம் கூடும். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நிதி நிலை வலுவாக இருக்கும். இன்று பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். பணியிடத்தில் உங்களின் நேர்மையான உழைப்புக்கு மரியாதை கிடைக்கும். இன்று உங்களின் செயலுக்கு அதிர்ஷ்டமும் துணை நிற்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் படிப்பு தொடர்பாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகளில் நல்ல முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்களின் மீது நிதி நிலை வலுப்படுத்த முடியும். காதல் வாழ்க்கையில் உங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். வாழ்க்கைத் துணையின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உங்கள் வேலையில் முயற்சிகள் வெற்றி அடையும். இன்று யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று தேவையற்ற பேச்சையும், பண பரிவர்த்தனைகளிலும் ஈடுபட வேண்டாம். இன்று பெரிய அளவில் அதிர்ஷ்டம் உங்களுக்கு துணை நிற்காது. எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையுடன் அணுகவும். பணியிடத்தில் உங்கள் மீது குற்றச்சாட்டுகள் எழவாய்ப்புள்ளது. எளிதாக முடிக்க கூடிய வேலைகள் கூட மன அழுத்தத்தைத் தரக்கூடியதாக அமையும். திருமண வாழ்க்கை மற்றும் குழந்தைகள் சார்ந்த விஷயம் சற்று கவலை தரும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று எந்த ஒரு வேலையும் முடிக்க சாதகமான நாளாக அமையும்.. பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களின் தைரியம் அதிகரிக்கும். பணியிடத்தில் கடினமான வேலைகளை எளிதாக முடிக்க முடியும். இன்று நிதி நிலை மேம்படும். சிலருக்கு வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். ஆரோக்கியத்தை கவனம் தேவை.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் மன அழுத்தம் தரக்கூடிய விஷயங்கள் நடக்கும். இன்று கடினமான வேலையில் நண்பர்களுடன் ஆதரவுடன் நிறைவேற்ற முடியும். உங்களின் ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. இன்று யாருக்கும் வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். தொழில், வியாபாரம் மாற்ற நினைப்பவர்களுக்கு சாதகமான நாளாக அமையும். உங்கள் வேலையில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் சூழ்நிலை நேர்மறையாக இருக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் உங்களின் உடன் பிறந்தவர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். இன்று உணவு விஷயத்தில் கவனம் தேவை. வெளி உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். குடும்ப விஷயங்கள் மகிழ்ச்சியை தரும். பணியிடத்தில் சக ஊழியர்களின் அறிவுரையும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். இன்று குழப்பமான மனநிலை மாறும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று அரசியலில் தொடர்புடையவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பிறரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானதாக மாறும். எதிர்காலம் தொடர்பான திட்டங்களில் ஈடுபடுவீர்கள். உங்கள் நிதி நிலை முன்னேற்றுவதற்கான பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் தகராறுகள் தீரும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப எதிர்காலம் குறித்து கவலை ஏற்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்களின் நிதி நிலைகள் கவனம் தேவை. இன்று வியாபாரத்தில் நல்ல லாபம் அடைய வாய்ப்பு உள்ளது. இன்று விருப்பத்திற்கு மாறாக சில செலவுகளை செய்ய நேரிடும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் வேலைவாய்ப்புகள் தனியாக செய்து முடிக்கவும்.
- 2023 rasi palan
- 2024 raasi palan
- 2024 rasi palan
- daily palan
- Featured
- indraya rasi palan
- nalaiya rasi palan
- pugazh media rasi palan
- raasi palan
- rasi palan
- rasi palan 2024
- rasi palan today
- rasi palan today tamil
- shelvi rasi palan
- sirappu rasi palan
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- today palan
- Today Rasi Palan
- vara rasi palan
- vara rasi palan shelvi
- vendhar tv rasi palan
- vidyadharan rasi palan