ஜோதிடம்

19-12-2022 இன்றைய ராசி பலன்

Share
WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
Share

மேஷம்

aries 01விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.

சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு உதவுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்

taurus 02வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தொட்டது துலங்கும்

மிதுனம்

gemini 03 பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும்.

வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள்.  உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.

கடகம்

cancer 04யணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும்.

வெளியூரிலிருந்து வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

சிம்மம்

leo 05

உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு.

வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள்.  உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

கன்னி

virgo 06கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். அழகும் இளமையும் கூடும்.

இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தடைகள் உடைபடும் நாள்.

துலாம்

libra 07ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். உங்களைப் பற்றி சிலர் தவறாக பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள்.

வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

விருச்சிகம்

scorpio 08விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள்.

வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சினைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

தனுசு

sagittarius 09ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள்.  உத்தியோகத்தில் எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சிறப்பான நாள்.

மகரம்

capricorn 10மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்குவரும்.

வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

கும்பம்

aquarius 11கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல் டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்மறை சிந்தனைகள் பிறக்கும்.

வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.

மீனம்

pisces 12சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப்போய் பொல்லாப் ஆக போய் முடியும். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும்.

வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

#Astrology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 06 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 6.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 செவ்வாய்க் கிழமை, சந்திரன் சிம்மம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 02 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 2.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 19, வியாழக் கிழமை, சந்திரன் மிதுனம்...