இன்றைய ராசி பலன் 15.10.2023 – Today Rasi Palan
இன்றைய ராசிபலன் அக்டோபர் 15, 2023, சோபகிருது வருடம் புரட்டாசி 28 ஞாயிற்றுக்கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். மீன ராசியில் உள்ள உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று குதூகலமான நாளாக இருக்கும். ராசியின் இருக்கும் குரு, ராகு இன்றைய நாளில் தனலாபங்கள் கொடுப்பார்கள். சந்திரன் ஏழாம் இடத்தில் இருப்பதால் குடும்பத்தில் கணவன் மனைவியே நெருக்கம் சிறப்பாக இருக்கும். இன்று மனதிற்கு அமைதியான நாளாக அமைகிறது. குரு சந்திர யோகம் உள்ள இன்றைய நாள் உங்களுக்கு எண்ணங்கள் நிறைவேறக்கூடிய நாளாக இருக்கும். குலதெய்வ வழிபாடு செய்வது சிறப்பானது.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சந்திர பகவான் ஆறாம் இடத்தில் இருப்பதால் உங்களின் செலவுகள் அதிகரிக்கும். இருப்பினும் உங்களுக்கு மன அமைதியும், திருப்தியும் கிடைக்கக்கூடிய நாளாகவே இருக்கும். புதன் பகவான் சந்திரனுடன் சேர்ந்து சந்திப்பதால் நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றிகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று ராசிநாதன் புதன் பகவான், சந்திரனுடன் சேர்ந்து இருப்பது குழந்தைகள் தொடர்பான நன்மை உண்டாகும். இன்று நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டு .நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த பயணங்கள் இனிமையாக முடியும். நீங்கள் நினைத்த காரியங்களும் சிறப்பாக நிறைவேறும். மிதுன ராசி நேயர்களுக்கு இன்று காலை வேளையில் நல்ல செய்திகள் காத்திருக்கிறது. இன்று நீங்கள் அன்னதானம் செய்வதால் மனநிறைவும், ஆரோக்கியமான நாளாகவும் இருக்கிறது..
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று ராசிநாதன் சந்திரன், புதன் பகவானுடன் சேர்ந்து நான்காம் இடத்தில் இருப்பதால் பூமி சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். நீண்ட நாட்களாக இருக்கும் சொத்து பிரச்சனைகள், வியாபாரங்கள் தொடர்பான பிரச்சனைகள் தீர்வதற்கான வாய்ப்புள்ள நாள். சந்திரன், புதனின் சேர்க்கையால் வெற்றிகள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். இந்த நாள் மேலும் சிறப்பாக அமைய கடக ராசி நேயர்கள் இன்று சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் ஏற்றம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். ராசிநாதன் சூரியன், கேதுவுடன் சேர்ந்து இரண்டாம் இடத்தில் இருப்பதால், ராகு எட்டாம் இடத்தில் இருப்பதால் சிரித்திரு குடும்ப சண்டைகள் அவ்வப்போது வந்து செல்லும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றங்கள் ஏற்படும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு குழப்பங்கள் இருந்தாலும் கூட அளவில் மாற்றங்கள் எதுவும் இருக்காது. கன்னி ராசி நேயர்களுக்கு சந்திரனும், புதனும் இரண்டாம் இடத்தில் இருப்பது ஒற்றுமையை ஓங்க செய்யும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். நவராத்திரி தொடங்கக்கூடிய இன்றைய நாளில் நீங்கள் எந்த காரியத்தை தொடங்கினாலும் அதில் வெற்றி கிடைக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று ராசியில் சந்திக்க கூடிய சந்திர பகவானின் அமைப்பால் உங்களுக்கு சற்று மனக் கிலேசம் ஏற்பட வாய்ப்புள்ளது. எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். நவராத்திரி ஆரம்பம் ஆகக்கூடிய இன்றைய நாளில் வராகி அம்மன் வழிபாடு இன்று உங்களுக்கு சிறப்பு பலனை அள்ளித் தரும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று மனதில் உறுதி தரக்கூடிய நாளாக இருக்கும். லாபத்தில் இருக்கக்கூடிய புதன், சந்திரன் ஆகிய கிரக சேர்க்கை உங்களுக்கு உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியத்தையும் தரக்கூடியதாக இருக்கும். இன்றைய ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு செய்வது நல்லது.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உற்சாகத்தைத் தரக்கூடிய நாளாக இருக்கும். திருமணத்தடை இருக்கும் நபர்களுக்கு, திருமணத்தடை நீங்கி நல்ல செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது. அன்பு மனிதருக்கு ஆறுதல் தரப்பட நாளாக இருக்கும். தாய், தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.இன்று நீங்கள் எதிர்பார்த்த வேலையில் வெற்றி கிடைக்கும். விநாயகருக்கு இன்று அறுகம்புல் அர்ச்சனை செய்ய பிச்சைக்காரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். நாட்களாக உங்களுக்கு தடைபட்ட வேலைகள் முடிவடையும். இன்று மகர ராசி நேயர்களுக்கு மனதிற்கு நிறைவான, அதிர்ஷ்டமான நாளாக அமைகிறது. இனிய காரியங்கள் நிறைவேறும். உடன்பிறந்த சகோதர, சகோதரிகள் மூலம் நற்பலன்கள் கிடைக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வது நல்லது. நீங்கள் எடுத்த காரியங்களிலும், புதிய வேலை முயற்சிகளிலும் தடை,குழப்பம் ஏற்படலாம். இன்று நண்பர்கள் மூலம் ஆறுதலும், குழப்பமும் தீரும். மாலை நேரத்தில் எடுக்கக்கூடிய முடிவுகள் சரியாக அமையும். இன்று நீங்கள் சந்திக்க கூடிய முக்கிய நபர்கள் மூலம் நன்மைகள் மேலோங்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று மீன ராசிக்கு நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது. உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் எந்த ஒரு வேலையிலும் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். குடும்பத்தில் சின்ன சின்ன மனக் லேசங்கள் வந்து சொல்லும். பசு மாடுகளுக்கு உணவு அளிப்பதால் தடைகள் நீங்கும்.இன்று கணவன் மனைவி சிறிய ஒற்றுமையில் குறைபாடு ஏற்படலாம்.பல நாட்களாக இருந்த மனக்குழப்பத்தில் இருந்து வெளி வருவீர்கள்.
- 2023 rasi palan
- 2024 Rasi Palan in Tamil
- aipassi matha rasi palan 2023
- daily rasi palan
- daily rasi palan sun tv
- daily rasi palan tamil
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan tamil
- nalaiya rasi palan
- pugazh media rasi palan
- rasi palan
- rasi palan today
- rasi palan today tamil
- sithariyal maruthuvam rasi palan
- sithariyal rasi palan
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- today palan
- Today Rasi Palan
- today rasi palan in tamil
- tomorrow rasi palan