​இன்றைய ராசி பலன் 13.08.2023 - Today Rasi Palan
ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 13.08.2023 – Today Rasi Palan

Share

​இன்றைய ராசி பலன் 13.08.2023 – Today Rasi Palan

ஆகஸ்ட் 13, 2023, சோபகிருது வருடம் ஆடி 28 ஞாயிற்றுக்கிழமை. சந்திரன் மிதுன ராசியில் திருவாதிரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். துவாதசி திதி நடக்கக்கூடிய இன்று சித்த யோகம் உள்ள நாள். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.

மேஷம் ராசி பலன்
மேஷ ராசியினருக்கு இன்றைய நாள் நன்மைகள் நடக்கும். தொலைதூரத்திலிருந்து வரக்கூடிய சொந்தங்கள் மூலம் சுப செய்திகள் கிடைக்கும். பிரதோஷ தினமான இன்று சிவ பெருமான் வழிபாடு செய்வது எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு நல்ல செய்திகள் காத்திருக்கிறது. குடும்பத்தில் தன லாபம் ஏற்படும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த பகைமை தீரும். குடும்ப சௌக்கியங்கள் அதிகரிக்கும். இன்று பெரியோர்களின் ஆசி, ஆன்மிக குருக்களின் சந்திப்பும் கிடைக்கும். குடும்பத்தின் சுகத்திற்காக இன்று ஆன்மிக பயணங்கள் செய்வது மனதிற்கு திருப்தியை தரும். தன லாபங்கள் ஏற்படும். பெண்களுக்கு உயர்வான நாள்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்று மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக இருக்கும். குழந்தை பாக்கியத்திற்காக எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு அதற்கான நல்ல செய்திகள் கேட்கலாம். லாபத்தில் இருக்கக்கூடிய ராகுவும், கேதுவும் நல்ல அனுகூலமாக இருப்பார்கள். சூரியனின் சஞ்சாரம் நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றியைத் தரும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி நேயர்களுக்கு இன்று பெண்களுக்கு உயர்வான நாளாக இருக்கும். பல நாட்களாக இருந்து வந்த கனவுகள் நிறைவேறும். குடும்பத்தில் சந்தோஷங்கள், விட்டுப் பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவது போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும். இன்று பலவிதமான நன்மைகள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். நண்பர்களின் உதவிகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.
இன்று மகாலட்சுமியை வணங்கவும்.

சிம்ம ராசி பலன்

சிம்ம ராசி நேயர்களுக்கு இன்று சூரிய பகவானின் அனுக்கிரகம் முழுமையாக கிடைக்கும். இன்று குடும்பத்தில் உள்ளவர்களின் அனைவரின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாலை நேரத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். அலுவலக விஷயத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். புதிய விண்ணப்பங்கள் செய்ய சாதகமன நாள்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி நேயர்களுக்கு இன்று அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். இருச்சகர வாகனத்தில் செல்பவர்கள் கவனமாக செல்வது நல்லது. நீண்ட நாட்களாக இருந்து கனவுகள் நிறைவேறும். கொடுக்கல், வாங்கலில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். நண்பர்கள் மூலம் வர வேண்டிய பணம் வந்து சேரும். இன்று மறைமுக எதிரிகளால் உண்டாகும் பிரச்னைகள் தீரும். எடுத்த காரியத்தில் ஜெயம் உண்டாகும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்று ராசியில் இருக்கும் கேது, 7ல் இருக்கும் ராகு நல்ல சாதக பலனைத் தருவார்கள். காதலர்களுக்கு முன்னேற்றமான நாளாகவும், பிரிந்தவர்கள் ஒன்று சேரவும் வாய்ப்புள்ள நாள். பெண்களுக்கு உயர்வான நாளாக இருக்கும். சகோதர, சகோதரிகளால் நன்மைகள் உண்டு. இன்று பிரதோஷ காலத்தில் சிவ பெருமானை வணங்குவது நன்மையைத் தரும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்ச்சிக ராசி நேயர்களுக்கு இன்று அனுஷம், கேட்டை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. அதனால் எந்த விஷயத்திலும் கவனத்துடன் செயல்படவும். குடுபத்தில் உள்ள சின்ன சின்ன பிரச்னைகள் தீரும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் சுப செலவுகள் ஏற்படும். விருச்சிக ராசி நேயர்கள் இன்று விநாயகருக்கு பாலபிஷேகம் செய்ய தோஷங்கள் தீரும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி நேயர்களுக்கு இன்று நாள் முழுவதும் அலைச்சல் ஏற்படக்கூடியதாக இருக்கும். இருப்பினும் அதன் மூலம் சாதக பலன்கள் உண்டாகும். காதலர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். மனதிற்கு திருப்தியான நாளாக அமையும். பிரதோஷ தினமான இன்று சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்ய உடல் ஆரோக்கியம் ஏற்படும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி நேயர்களுக்கு இன்று மகத்தான நாளாக அமையும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெண்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். மனதிற்கு திருப்தியும், சந்தோஷமும் உண்டாகும்.

கும்ப ராசி பலன்
கும்ப ராசி நேயர்களுக்கு இன்று குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியம் மேம்படும். இன்று ஆஞ்சநேயர்களுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதால் நன்மைகள் அதிகரிக்கும். இன்று தொலைதூரத்திலிருந்து நல்ல செய்திகள் வரலாம். ராகு காலத்தில் பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபடவும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி நேயர்களுக்கு இன்று சகோதர, சகோதரிகளின் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரங்கள் சிறப்படையும். புதிய வியாபாரங்கள் வெற்றி அடையும். வழக்கு, விசாரணைகளில் சற்று மன குழப்பம் இருந்தாலும், இறுதியில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு உயர்வான நாளாக இருக்கும். மாலை நேரத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். பிரதோஷ நேரத்தில் சிவ பெருமான் வழிபாடு செய்யவும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
horoscope 2026 predictions 1763385900
ஜோதிடம்

2026 திரிகிரக யோகம்: இந்த 3 ராசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம் – குவியப்போகும் செல்வம்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, 2026 ஆம் ஆண்டு நிகழவுள்ள ‘திரிகிரக யோகம்’ சில ராசிகளுக்குப் பொற்காலமாக அமையவுள்ளது....

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 டிசம்பர் 2025 : 12 ராசிகளுக்கு வருமானம் உயரும்

இன்று டிசம்பர் 01, கார்த்திகை மாதம் 15, சந்திர பகவான் மீன ராசி ராசியில் ரேவதி...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 14 நவம்பர் 2025 : லட்சுமி தேவியின் அருளால் லாபம் சேரக்கூடிய ராசிகள்

இன்று 2025 நவம்பர் 14ம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திர பகவான் சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 13 நவம்பர் 2025 – வேலையில் கவனம் தேவைப்படும் ராசிகள்

இன்று நவம்பர் 13ம் தேதி, ஐப்பசி மாதம் 27 சந்திர பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்...