Rasi Palan new cmp 25 scaled
செய்திகள்ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 02 ஜூலை 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Share

இன்றைய ராசி பலன் 02 ஜூலை 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலனை (ஜூலை 2, 2024 செவ்வாய்க் கிழமை) இன்று சந்திரன் பகவான் மேஷ ராசியில் பரணி, கிருத்திகை நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினம். இன்று கன்னி ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.

இன்றைய ராசிபலன் ஜூலை 2, 2024, குரோதி வருடம் ஆனி 18, செவ்வாய்க் கிழமை, சந்திரன் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். கன்னி ராசியில் உள்ள அஸ்தம், சித்திரை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் கஷ்டங்களில் இருந்து விடுபடுவீர்கள். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வணிகஸ்தர்கள் செய்யக்கூடிய சிறிய மாற்றம் கூட நல்ல பலனை தரும். இன்று உங்களின் லட்சியம் நிறைவேறும். மனிதன் தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். வாழ்க்கைத் துணையின் உடல் நிலையில் அக்கறை தேவை.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் சில சுப காரியங்கள் தொடர்பாக மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று மாலை உங்கள் வீட்டிற்கு விருந்தினர்களின் வருகை இருக்கும். உங்களின் வாழ்க்கை கருத்தை மேம்படுத்தும் விதமாக சில பொருட்களை வாங்குவீர்கள். இன்று செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக கவலை ஏற்படும்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் வேகமடையும். உங்களின் நிதி நிலை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் செயல்களில் துரிதம் இருக்கும். இன்று வீண் வேலை, அலைச்சல்களில் இருந்து விலகி இருக்கவும். மாணவர்களுக்கு கல்வியில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உங்கள் வேலைகள் இடம் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று உங்கள் என் செயல்பாடு மனம் அமைதியை தரும். உங்களின் நிதி நிலைமை சேர்த்து கவலை தரும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று சோம்பலை கைவிடுத்து சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டிய நாள். வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களின் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். வணிகம் தொடர்பான விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். தந்தை மற்றும் பெரியோர்களின் ஆலோசனை சிறப்பான வெற்றியை தரும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் அலைச்சல் அதிகரிக்கும். வேலையை உற்சாகத்துடன் முடித்து வெகுமதியை பெறுவீர்கள். நீங்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரத்தில் நல்ல ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு மன அமைதியை தரும். பிள்ளைகளின் திருமணம் தொடர்பாக நல்ல வரம் அமையும். ஆன்மீக காரியங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சமூக மற்றும் அரசியல் துறையில் உள்ளவர்கள் கவனமாக செயல்படவும். எதிரிகளைச் சந்திக்க நேரிடும். இன்று தைரியத்துடனும், புத்திசாலித்தனம் செயல்பட சூழலை வெல்ல முடியும். இந்த தேவையற்ற கவலைகள் உங்களை தொந்தரவு செய்ய வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம். இந்த நாள் குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியுடனும், மும்முரமாகவும் செயல்படுவீர்கள்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று வேலை மற்றும் வியாபாரத்தில் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். இன்று உங்களின் புதிய திட்டங்கள் நல்ல வெற்றியை தரும். மனக்கவலை தீரக்கூடிய நாள். இன்று அவநம்பிக்கைகளை விடுத்து நேர்மறையான சிந்தனையுடன் செயல்படவும். இன்று நீங்கள் சில விஷயத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தால், அதற்கு சாதகமான நாளாக அமையும். அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று பிறரிடம் சிக்கி உள்ள உங்களின் பணம் சிரமத்திற்கு பின் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று உங்களின் அன்றாட பணிகளை கவனக்குறைவாக இருக்க வேண்டாம். இன்று உங்களின் நம்பிக்கை அதிகமாக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அது தொடர்பாக செலவுகள் அதிகரிக்கும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. இன்று வியாபாரம் செய்யக்கூடியவர்கள் நல்ல லாபத்தை பெறலாம். இன்று நாள் முழுவதும் சில நல்ல செய்திகள் தேடி வரும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று தேவையற்ற வாக்குவாதங்கள், சண்டைகளை தவிர்ப்பது நல்லது. ஆன்மீகத் தளங்களுக்கு யாத்திரை செல்ல திட்டமிட்டவர்களுக்கு சாதகமான நாளாக அமையும்..

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வேலை தொடர்பாக பயணங்கள் செல்ல நேரிடும். பயணங்கள் மிகவும் அனுகூலமானதாக அமையும். இன்று உங்களின் நேரத்தையும், திறமையை சரியாக பயன்படுத்த நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். இன்று உங்களின் நிதிநிலை வலுவாக இருக்கும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று பெற்றோருக்கும், குருவுக்கும் சேவை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் செயலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இருக்கும். இன்று எதிரிகள், பகைமை மனநிலை கொண்ட நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். உங்கள் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய வழிகளை காண்பீர்கள்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...