ntitled Design 2026 01 05T134854.170
கட்டுரைவிஞ்ஞானம்

பிரபஞ்சம் மீண்டும் சுருங்கி அழியுமா? கருப்பு ஆற்றல் குறித்து விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிரடித் தகவல்!

Share

தற்போது பிரபஞ்சம் விரிவடைவதற்குக் காரணமாக இருக்கும் ‘கருப்பு ஆற்றல்’ (Dark Energy) எதிர்காலத்தில் வலுவிழக்கக்கூடும் என்றும், அதன் விளைவாகப் பிரபஞ்சம் மீண்டும் ஒரு புள்ளியில் சுருங்கி அழியும் வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

‘Royal Astronomical Society’ இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வறிக்கையில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபஞ்சத்தை மிக வேகமாக விரிவடையச் செய்யும் ஆற்றலாகக் கருதப்படும் ‘கருப்பு ஆற்றல்’, ஒரு கட்டத்தில் மந்தமடையத் தொடங்கும். அப்போது ஈர்ப்பு விசையின் ஆதிக்கம் அதிகரித்து, விரிவடைதல் நின்று பிரபஞ்சம் தலைகீழாகச் சுருங்கத் தொடங்கும்.

விஞ்ஞானிகள் இந்த நிகழ்வை ‘Big Crunch’ (பெருஞ் சுருக்கம்) என்று அழைக்கின்றனர். இது பிரபஞ்சத்தின் தொடக்கமான ‘Big Bang’ (பெருவெடிப்பு) நிகழ்விற்கு நேர் எதிரான ஒன்றாகும். அதாவது, கோடிக்கணக்கான நட்சத்திரங்கள், விண்மீன் மண்டலங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று மோதி மீண்டும் ஒரு சிறிய மற்றும் அடர்த்தியான புள்ளியில் ஒன்றிணைந்துவிடும்.

இந்த அழிவு உடனடியாக நிகழப்போவதில்லை என விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். பிரபஞ்சம் மீண்டும் சுருங்கி அழியத் தொடங்குவதற்கு இன்னும் சுமார் 19.5 பில்லியன் ஆண்டுகள் ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு பிரபஞ்சத்தின் முடிவு குறித்த தற்போதைய அறிவியல் புரிதல்களில் புதிய விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது.

 

 

Share
தொடர்புடையது
whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...

puthiyathalaimurai 2025 09 11 vyw9mwvj 3
சுகாதாரம்கட்டுரை

2050-க்குள் புற்றுநோய் பாதிப்பு 50% உயரும்: கூல் லிப் குறித்து அடையாறு புற்றுநோய் மையம் கடும் எச்சரிக்கை!

ஒருவர் எவ்வளவு காலம் வாழ்வார் என்பதை உணவுப் பழக்கம் அல்லது உடற்பயிற்சி மட்டுமே தீர்மானிப்பதில்லை. அதில்...

til february 2026 being a perfect month is a rare occurence v0
கட்டுரைவரலாறு

2026 பெப்ரவரி: நாட்காட்டியில் ஒரு முழுமையான மாதம்! – 11 ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்துள்ள அரிய நிகழ்வு.

தற்போது பிறந்துள்ள 2026 பெப்ரவரி மாதம், நாட்காட்டி அமைப்பில் மிகவும் அரிதான மற்றும் நேர்த்தியான ஒரு...