வாட்ஸ் அப்பில் அறிமுகமாகும் அம்சம்
வாட்ஸ் அப் செயலியில் தற்போது பயனர்களுக்கு மேலும் வசதியளிக்கும் முகமாக புதிய வசதியொன்றை மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் அறிவித்துள்ளார்.
அந்த வகையில், ஒரு பழைய தொலைபேசியிலிருந்து புதிய தொலைபேசிக்கு வாட்ஸ் அப் குறுஞ்செய்தியை பரிமாற வேண்டுமெனின் google drive மூலம் backup செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
அதற்கு பதிலாக chat transfer ஐ QR வாயிலாக செய்து கொள்ளும் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் இதற்கு இரண்டு சாதனங்களிலும் ஒரே ஒஎஸ் (OS) இயங்கவேண்டியது அவசியம் ஆகும்.
இந்த அம்சம் மூலம் பெரிய கோப்புக்களையும் (big files) அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment