முடங்கியது வாட்ஸ்அப்!

500x300 1723843 whatsapp 1

பல்வேறு நாடுகளில் பிரபல வலைத்தளமான வாட்ஸ்அப் முடங்கியது.

பயனர்களால் தற்போது செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை. சுமார் ஒரு மணி நேரமாக வாட்ஸ்அப் சேவை முடங்கியதால் பயனர்கள், எந்த தகவலையும் அனுப்ப முடியாமல் தவிக்கின்றனர்.

மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்அப் சேவைகள் தற்போது இடையூறுகளைச் சந்தித்து வருவதாக பயனர்கள் பலர் புகார் அளித்தவண்ணம் உள்ளனர்.

டுவிட்டரில் இது தொடர்பான ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. தொழிநுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ்அப் சேவை முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோளாறு சரி செய்யப்பட்டு வாட்ஸ்அப் விரைவில் செயல்படும் என மெட்டா நிறுவனம் கூறி உள்ளது.

#technology

Exit mobile version