பயணத்தை முடித்து பூமிக்கு புறப்பட்டது ஒரியன் விண்கலம்

orion

நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்ப அமெரிக்க விண்வெளி கழகமான நாசா திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை வடிவமைத்துள்ளது. இதில் சோதனை முயற்சியாக ராக்கெட் மூலம் ஒரியன் விண்கலம் கடந்த மாதம் 16ம் திகதி விண்ணில் ஏவப்பட்டது.

ஓரியன் விண்கலம் நிலவின் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு சுற்றியது. இந்த நிலையில் நிலவின் மேலே ஆய்வை முடித்துக் கொண்டு ஓரியன் விண்கலம் பூமிக்கு புறப்பட்டுள்ளது.

வருகிற 11ம் திகதி உள்ளூர் நேரப்படி காலை 9.40 மணிக்கு ஓரியன் விண்கலத்தை சான்டியாகோவில் பசிபிக் பெருங்கடலில் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அங்கிருந்து விண்கலம், அமெரிக்க கடற்படை கப்பலில் ஏற்றப்படும். ஓரியன் விண்கலம் பூமிக்கு திரும்பிய பிறகு அதன் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு ஆர்டெமிஸ்-2 திட்டம் தொடங்கப்படும்.

#technology #world

Exit mobile version