சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனின் அறிமுகம்! சிறப்பம்சங்கள் பல

1770295 redmi note 11r 1

சியோமி நிறுவனம் புதிய ரெட்மி நோட் 11R ஸ்மார்ட்போனினை மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.

இதன் சிறப்பம்சங்கள் ரெட்மி நோட் 11E ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டதை போன்றே இடம்பெற்று இருக்கிறது. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் போக்கோ M5 மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

ரெட்மி நோட் 11R ஸ்மார்ட்போன் வைட், புளூ மற்றும் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.

இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 1099 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 12 ஆயிரத்து 575 என்றும், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 1299 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 14 ஆயிரத்து 895 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 1499 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 17 ஆயிரத்து 155 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை சீனாவில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

ரெட்மி நோட் 11R அம்சங்கள்

#Redminote11r

Exit mobile version