கூகுள் நிறுவனத்தின் சாட் சேவைகளில் ஒன்றான ஹேங்அவுட்ஸ் என்ற சேவையை, இலவசமாக பயன்படுத்துபவர்களுக்கு இன்னும் சில மாதங்களில் நிறுத்தப்பட போவதாக கூகுள் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இருப்பினும் இலவசமாக கூகுள் ஹேங்அவுட்ஸ் பயன்படுத்தி வரும் யூசர்கள், வரும் நவம்பர் முதல் கூகுள் இமெயில் சேவையுடன் இணைக்கப்பட்டிருக்கும் கூகுள் சாட் சேவையை பயன்படுத்தலாம்.
இதிலிருக்கு தரவுகளை எளியமுறையில் டவுன்லோடும் செய்து கொள்ளலாம்.
- கணினி மற்றும் கம்ப்யூட்டரில் ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சாட் ஆப்ஷனில் கூகுள் ஹேங்அவுட்ஸ் அல்லது சாட் என்ற இரண்டு விருப்பங்களில் ஒன்றை தேர்வு செய்ய முடியும்.
- நீங்கள் ஹேங்அவுட்ஸ் பயன்படுத்தினால், மீண்டும் ஜிமெயில் சாட்டுக்கு செல்ல விருப்பமா என்ற ஆப்ஷன் ஒவ்வொரு முறை உங்கள் ஜிமெயில் கணக்கில் லாகின் செய்யும்போதும் கேட்கப்படும்.
- இதேபோல ஆண்ட்ராய்டு மட்டும் ஆப்பிள் சாதனங்களில், ஜிமெயில் செயலியில், ‘Chat’ ஆப்ஷனுக்கு மீண்டும் மாற விருப்பமான என்ற கேள்வி தோன்றும்.
- நீங்கள் ஹேங்அவுட்ஸ் பயன்படுத்தும் யூசராக இருந்தால், Gmail Chat விருப்பத்தைத் தேர்ந்தெடுங்கள்.
- தற்போதைய கூகுள் ஹேங்அவுட்ஸ் முழுவதுமாக நிறுத்தப்பட்டால் அதில் இருக்கும் தரவுகளை இனி பார்க்க முடியாது.
- எனவே, ஹேங்அவுட்ஸ்-இல் இருந்து எவ்வாறு உங்கள் டேட்டாவை டவுன்லோடு செய்வது என்பதை பார்க்கலாம்.
#googlehangouts
Leave a comment