வாட்ஸ்அப் இல் ஷாப்பிங் வசதி – வெளியாகியது புதிய அப்டேட்

Ireland WhatsApp 1 1631285724158 1631285745778

மெட்டா நிறுவனத்தின் குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப், தனது பிஸ்னஸ் ப்ரோஃபைல் பயனர்களுக்கு புது அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தளத்தினுள் பிஸ்னஸ்களை தேடி, அவர்களிடம் சாட் செய்து பொருட்களை வாங்க முடியும்.

வாட்ஸ்அப் பிஸ்னஸ் பயனர்கள் பிஸ்னஸ்களை – வங்கி, பயணம் என குறிப்பிட்ட பிரிவுகளில் தேட முடியும். எனினும், முதற்கட்டமாக இந்த அம்சம் பிரேசில், கொலம்பியா, இந்தோனேசியா, மெக்சிகோ மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த அம்சம் பிஸ்னஸ் ப்ரோஃபைல் பயனர்கள் வியாபாரங்களை குறுந்தகவல் செயலிக்குள் எளிதில் கண்டறிய வழி செய்யும். இவ்வாறு செய்யும் போது காண்டாக்ட்களை சேவ் செய்ய வேண்டிய அவசியமோ, வியாபாரங்களின் விவரங்களை வலைதளங்களில் தேட வேண்டிய அவசியம் இல்லை.

வியாபாரங்களை தேடுவதோடு வாட்ஸ்அப் மூலம் நேரடியாக பொருட்களை வாங்கும் வசதியும் வழங்கப்படுகிறது. இவ்வாறு செய்யும் போது ஷாப்பிங் வலைதளத்திற்கு செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. பேமண்ட் வசதிக்காக வாட்ஸ்அப் பல்வேறு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இந்த வசதியை வழங்கி இருக்கிறது.

இந்த அம்சம் ஜியோமார்ட் சேவையை போன்றே செயல்படுகிறது. இந்த அம்சம் பாதுகாப்பானது என்பதோடு, பயனர்களின் தனியுரிமையை காக்கும் என வாட்ஸ்அப் அறிவித்து இருக்கிறது.

மேலும் பயனர்கள் தங்களின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பாதுகாப்பான பண பரிமாற்றத்தை செய்ய முடியும். இந்த அம்சம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதோடு வியாபாரங்கள் வாட்ஸ்அப் மூலம் பொருட்களை விற்க வழி செய்கிறது.

#technology

Exit mobile version