டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை!

download 12 1 1

அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இங்கிலாந்து அரசு . இதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து அரசு அலுவலக செல்போன்களில் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி அந்நாட்டு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அரசின் முக்கிய அலுவலகங்களின் பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான மின்னணு சாதனங்களில் சீனா வீடியோவான டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை விதிப்பதாக இங்கிலாந்து பாராளுமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா அரசும் டிக் டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் கூறுகையில், டிக் டாக் செயலியால் ஏற்படும் சாதக, பாதங்கள் குறித்து உள்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

#Technology

Exit mobile version