முக்கிய அம்சத்துடன் வருகிறது ஒப்போ வாட்ச் 3!

oppo watch on wrist hero

ஒப்போ நிறுவனம் விரைவில் ஒப்போ வாட்ச் 3 எனும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் வருகிற ஆகஸ்ட் மாதம் OWW211, OWW212 மற்றும் OWW213 என மூன்று வெவ்வேறு மாடல்களில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக், சில்வர், டார்க் கிரே, மற்றும் லைட் கோல்டு ஆகிய நான்கு நிறங்களில் வர உள்ளது.

அதில் அதிகமான ஸ்கிரீன் டூ பாடி ரேசியோ இருக்கும் எனவும், மைக்ரோ கர்வுடு ஸ்கொயர் டிஸ்ப்ளேவை, இதில் 2 மாடல்களில் 42 mm டயலும், ஒரு மாடலில் மட்டும் 46 mm டயலுடம் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

சமீபத்திய தகவல்படி இந்த ஸ்மார்ட்வாட்சில் ஸ்நாப்டிராகன் W5 Gen 1 சிப் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது.

இந்த சிப் உடன் வரும் முதல் ஸ்மார்ட்வாட்ச் ஆக ஒப்போ வாட்ச் 3 இருக்கும் என தெரிவிக்கப்படுகி்னறது.

#Smartwatch #Technology

 

Exit mobile version