புது அம்சங்களுடன் அறிமுகமாகும் நோக்கியா G11 ப்ளஸ் மாடல்!

Capture

நோக்கியா நிறுவனம் தற்போது அதன் அடுத்த மாடலான G11 ப்ளஸ்-சை விரைவில் அறிமுகம் செய்ய தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் பல அம்சங்கள் நிறைந்துள்ளது.

6.5 இன்ச் டிஸ்ப்ளே, 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய வி நாட்ச் ஸ்கிரீன் மற்றும் யுனிசாக் ,T606 SoC புராசஸர் ஆகியவை G11 ப்ளஸ் மாடலிலும் இருக்கும் என கூறப்படுகிறது.

அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குகளத்துடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா G11 ப்ளஸ் மாடல் லேக் ப்ளூ, சார்க்கோல் கிரே ஆகிய நிறங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் சர்வதேச சந்தையில் வெளியாகும் என கூறப்படுகிறது.

#nokia #mobile #technology

Exit mobile version