‘இன்ஸ்டாகிராம்’மில் வருகிறது புது அப்டேட்! – இனி போட்டோவையும் ரீல்ஸாக பதிவிடலாம்

1735637 1733999 newproject 2022 07 22t161459462

இன்ஸ்டாகிராம் செயலியில் தற்போது ரீல்ஸில் வீடியோக்களை மட்டுமே பதிவிட முடியும்.

இந்த நிலையில் விரைவில் வர உள்ள புது அப்டேட்டின் மூலம் போட்டோக்களையும் வீடியோவாக எடிட் செய்து பதிவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது டிக்டாக்கிற்கு மாற்றான இந்திய செயலிகள் பிளே ஸ்டோரில் பிரபலமாகி வருகின்றன. அந்த வகையில் ஃபேஸ்புக் நிறுவனமும் டிக்டாக் செயலிக்கு மாற்றாக தனது இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் அம்சத்தை வழங்கி வருகிறது.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சம் என்பது வீடியோ-மியூசிக் ரீமிக்ஸ் சேவை ஆகும். இது இன்ஸ்டாகிராம் செயலியின் ஸ்டோரிஸ் பகுதியில் வழங்கப்படுகிறது. தற்போது ரீல்ஸில் புதிய அம்சத்தை இன்ஸ்டாகிராம் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

அதன்படி இன்ஸ்டாகிராமில் இனி புகைப்படங்களை தொகுத்து அதற்கு பின்னணியில் பாடல்களை ஒலிக்கவிட்டு ரீல்ஸாக பதிவிட முடியும் என்கிற புதிய அம்சத்தை அந்நிறுவனம் பயன்பாட்டுக்கு கொண்டுவர் உள்ளது.

தற்போது ரீல்ஸில் வீடியோக்களை மட்டுமே பதிவிட முடியும். விரைவில் வர உள்ள புது அப்டேட்டின் மூலம் போட்டோக்களையும் வீடியோவாக எடிட் செய்து பதிவிடலாம்.

இதற்காக விதவிதமான டெம்ப்ளேட்களையும் அந்நிறுவனம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சோதனை செய்யப்பட்டு வரும் இந்த அம்சம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

#technology

Exit mobile version