ரியல்மி நிறுவனம் தனது சமூக வலைதளங்களில் பிராஜக்ட் N பற்றிய டீசர்களை வெளியிட்டு வந்தது. தற்போது தனது அடுத்த தலைமுறை நார்சோ ஸ்மார்ட்போனின் புதிய டீசரை ரியல்மி வெளியிட்டுள்ளது.
ரியல்மி நிறுவனம் புதிய பிராஜக்ட் N-க்காக பிரத்யேக மைக்ரோசைட் ஒன்றை தனது வலைதளத்தில் உருவாக்கி இருக்கிறது. இதே மைக்ரோசைட் அமேசான் தளத்திலும் இடம்பெற்றுள்ளது. அதன் படி இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என தெரியவந்துள்ளது.
புதிய நார்சோ ஸ்மார்ட்போனின் பெயர் விவரங்களை ரியல்மி நிறுவனம் அறிவிக்கவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் புதிதாக N சீரிசில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Technology
Leave a comment