ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் அறிமுகம்! எவ்வளவு விலை தெரியுமா?

புதிய ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் முற்றிலும் புதிய ஏ16 பயோனிக் சிப்செட், 48MP பிரைமரி கேமரா, ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே என அசத்தலான அம்சங்களை கொண்டிருக்கிறது.

இத்துடன் கிராஷ் டிடெக்‌ஷன் மற்றும் செயற்கைக்கோள் சார்ந்து இயங்கும் எமர்ஜன்சி SOS வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் முறையே 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் OLED சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, ப்ரோ மோஷன் மற்றும் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

ஐபோனில் முதல் முறையாக ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பேட்டரியை சேமிக்க ஏராளமான தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. புது ஐபோன்களிலும் செராமிக் ஷீல்டு முன்புற கவர் வழங்கப்பட்டு உள்ளது.

ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் மாடல்களின் முன்பதிவு செப்டம்பர் 9 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது. விற்பனை செப்டம்பர் 16 ஆம் தேதி துவங்குகிறது.

ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் ஸ்பேஸ் பிளாக், சில்வர், கோல்டு மற்றும் டீப் பர்பில் நிறங்களில் கிடைக்கின்றன.

220908 iphone 14 pro 14 pro max 4

இந்திய விலை

#Iphone #Technology

Exit mobile version