220908 iphone 14 pro 14 pro max 4
தொழில்நுட்பம்

ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் அறிமுகம்! எவ்வளவு விலை தெரியுமா?

Share

புதிய ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் முற்றிலும் புதிய ஏ16 பயோனிக் சிப்செட், 48MP பிரைமரி கேமரா, ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே என அசத்தலான அம்சங்களை கொண்டிருக்கிறது.

இத்துடன் கிராஷ் டிடெக்‌ஷன் மற்றும் செயற்கைக்கோள் சார்ந்து இயங்கும் எமர்ஜன்சி SOS வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் முறையே 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் OLED சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, ப்ரோ மோஷன் மற்றும் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

ஐபோனில் முதல் முறையாக ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பேட்டரியை சேமிக்க ஏராளமான தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. புது ஐபோன்களிலும் செராமிக் ஷீல்டு முன்புற கவர் வழங்கப்பட்டு உள்ளது.

ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் மாடல்களின் முன்பதிவு செப்டம்பர் 9 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது. விற்பனை செப்டம்பர் 16 ஆம் தேதி துவங்குகிறது.

ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் ஸ்பேஸ் பிளாக், சில்வர், கோல்டு மற்றும் டீப் பர்பில் நிறங்களில் கிடைக்கின்றன.

220908 iphone 14 pro 14 pro max 4

இந்திய விலை

  • ஐபோன் 14 ப்ரோ 128 ஜிபி ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 900
  • ஐபோன் 14 ப்ரோ 256 ஜிபி ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 900
  • ஐபோன் 14 ப்ரோ 512 ஜிபி ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 900
  • ஐபோன் 14 ப்ரோ 1 டிபி ரூ. 1 லட்சத்து 79 ஆயிரத்து 900
  • ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 128 ஜிபி ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 900
  • ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 256 ஜிபி ரூ. 1 லட்சத்து 49 ஆயிரத்து 900
  • ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 512 ஜிபி ரூ. 1 லட்சத்து 69 ஆயிரத்து 900
  • ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 1 டிபி ரூ. 1 லட்சத்து 89 ஆயிரத்து 900

#Iphone #Technology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த...