இணையத்தில் லீக்கானது ஐபோன் 14 ப்ரோ! வீடியோ

maxresdefault

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 சீரிஸ் வெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது.

இந்தநிலையில் புது ஐபோன் 14 ப்ரோ மாடலின் வீடியோ இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

புது ஐபோனில் உள்ள இரு பன்ச் ஹோல்கள் இடையில் உள்ள இடைவெளியை பயனர்கள் எவ்வாறு அடையாளம் காண வேண்டும் என்பதை தெரிவிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

அதில் வீடியோவில் ஐபோன் 14 ப்ரோ மாடலில் உள்ள மாத்திரை வடிவ கட்-அவுட் செல்பி கேமராவுடன் இணைந்து ஒற்றை கட்-அவுட் போன்று மாறுகிறது.

இது மென்பொருள் மூலம் இயக்கப்படுகிறது. பயனர்கள் விரும்பும் பட்சத்தில் இதனை ஆன் அல்லது ஆஃப் செய்து கொள்ளலாம்.

நாட்ச் பகுதியில் உள்ள காலி இடத்தில் ஆப்பிள் தனது பயனர்களுக்கு பிரைவசி நோட்டிபிகேஷன்களை வழங்க முடியும் என்பதால் இந்த அம்சம் பயனுள்ளதாகவே தெரிகிறது.

தற்போதைய வீடியோவில் இருப்பது உண்மையில் ஐபோன் 14 ப்ரோ தானா அல்லது ஐபோன் 14 சீரிஸ் வெளியீட்டுக்கு பின் வெளியாகும் மாக் ஐபோன் மாடலா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வீடியோவில் உள்ள யுஐ வழக்கமான ஐஒஎஸ்-ஐ விட வித்தியாசமாகவே இருக்கிறது.

#iphone

Exit mobile version