ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 5710 எக்ஸ்பிரெஸ் ஆடியோ பீச்சர் போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
இந்த பீச்சர் போனில் பில்ட்-இன் வயர்லெஸ் இயர்பட்ஸ் உள்ளது. இதில் புதுமை மிக்க டிசைன் லவுட்ஸ்பீக்கர், ஆடியோ கண்ட்ரோல் பட்டன் மற்றும் பெரிய பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
இந்த போன் அதிநவீன பயனர்களின் இசை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பீச்சர் போன் நீண்ட கால பயன்பாட்டுக்கு உகந்ததை உறுதிப்படுத்தும் வகையில் சோதனை செய்யப்பட்டு இருக்கிறது.
நோக்கியா 5710 எக்ஸ்பிரெஸ் ஆடியோ போனின் விலை ரூ. 4 ஆயிரத்து 999 ஆகும். இதன் விற்பனை செப்டம்பர் 19 ஆம் திகதி முன்னணி சில்லறை விற்பனை மையங்கள் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் துவங்குகிறது. இது பல சிறப்பம்சங்களை கொண்டது.
நோக்கியா 5710 எக்ஸ்பிரெஸ் ஆடியோ அம்சங்கள்
- 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே
- 0.3MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- யுனிசாக் டி107 பிராசஸர்
- 4MB ரேம், 48MB / 128MB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- S30+ ஒஎஸ்
- பில்ட்-இன் வயர்லெஸ் இயர்பட்ஸ்
- வயர்லெஸ் எப்எம் ரேடியோ, MP3 பிளேயர்
- இரு ஸ்பீக்கர்கள்
- பவர், வால்யூம், மியூசிக் பட்டன்கள்
- ப்ளூடூத் 5.0, யுஎஸ்பி கனெக்ஷன்
- மைக்ரோ யுஎஸ்பி 2.0
- 1450 எம்ஏஹெச் பேட்டரி
Leave a comment