கம்யுனிடிஸ் அம்சம் அறிமுகம் – வாட்ஸ்அப்-இல் புதிய அப்டேட்

வாட்ஸ்அப் செயலியில் கம்யுனிடிஸ் எனும் புதிய அம்சம் வரும் மாதங்களில் சர்வதேச அளவில் வெளியிடப்படும் என மார்க் ஜூக்கர்பர்க் அறிவித்தஉ இருந்தார். ஏற்கனவே வெளியான தகவல்களின் படி வாட்ஸ்அப் செயலியில் கம்யுனிடிஸ் எனும் அம்சம் உருவாக்கப்பட்டு வந்தது. இந்த அம்சம் வாட்ஸ்அப் க்ரூப்களை ஒருங்கிணைக்கும் புது வசதியை செயல்படுத்துகிறது.

கம்யுனிடிஸ் அம்சத்தின் கீழ் பயனர்கள் பல்வேறு வாட்ஸ்அப் க்ரூப்களை ஒற்றை குடையின் கீழ் கொண்டுவர முடியும். கம்யுனிடிஸ் அம்சம் மூலம் வியாபாரங்கள் உரையாடும் போது மற்ற தளங்கள் வழங்குவதை விட அதிகளவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை வழங்க முடிவு செய்துள்ளது. எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் வாட்ஸ்அப்-இல் அதிகளவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

1786465 wa communities

புதிய கம்யுனிடிஸ் அம்சத்தை ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களது சாட்-இன் மேல்புறத்திலும், ஐஒஎஸ் பயனர்கள் சாட்-இன் கீழ்புறத்திலும் காண முடியும்.

இங்கிருந்து ஏற்கனவே உள்ள க்ரூப்களை ஒரு கம்யுனிடியின் கீழ் ஒருங்கிணைக்க முடியும். இதுதவிர புது கம்யுனிடியையும் உருவாக்க முடியும்.

கம்யுனிடியில் சேர்ந்த பின் பயனர்கள் க்ரூப்களின் இடையே தங்களுக்கு தேவையான விவரங்களை மிக எளிதில் பெற்றுக் கொள்ள முடியும். அட்மின்களும் மிக முக்கிய அப்டேட்களை கம்யுனிடியில் உள்ள அனைவருக்கும் அனுப்ப முடியும்.

புதிய கம்யுனிடிஸ் அம்சம் தவிர இன்-சாட் போலிங் மற்றும் 32 நபர்களுடன் வீடியோ காலிங் வசதி, க்ரூப் பயனர்கள் எண்ணிக்கை 1024 உள்ளிட்ட வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. எமோஜி ரியாக்‌ஷன், அதிக ஃபைல் ஷேரிங் மற்றும் அட்மின் ரிமுவல் போன்ற அம்சங்களை க்ரூப்களிலும் பயன்படுகத்த முடியும். இந்த வசதி கம்யுனிடி அம்சத்திற்கு பெருமளவு உதவியாக இருக்கும்.

வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் புது அம்சங்கள் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டு வருகின்றன. வரும் மாதங்களில் உலகம் முழுக்க இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

#technology

Exit mobile version