வாட்ஸ்அப்பில் புதிய வசதி அறிமுகம்

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.22.24.2 அப்டேட்டில் புது அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பயனர்கள் தங்களுக்கு தாங்காளாகவே குறுந்தகவல் அனுப்பிக்கொள்ள முடியும். இதுதவிர ப்ரோபைல் போட்டோ க்ரூப் சாட் எனும் புது வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக இந்த இரு அம்சங்களும் சோதனை முறையில் மிக சிறிய பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

மெசேஜ் யுவர்செல்ஃப் (Message Yourself) – அம்சம் கொண்டு பயனர்கள் அவர்களின் சொந்த மொபைல் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பிக்கொள்ள முடியும். இதற்கான வசதியை வாட்ஸ்அப் தனித்து காண்பிக்கிறது. சில பீட்டா டெஸ்டர்களுக்கு இந்த அம்சம் வேறு விதமான சின்க் வசதியை வழங்கி இருக்கிறது. அதாவது அவர்களின் சொந்த நம்பருக்கு குறுந்தகவல் அனுப்பும் போது, இவை ஏற்கனவே லின்க் செய்யப்பட்ட சாதனங்களுடன் சின்க் செய்யப்பட்டு விடும்.

1784765 wa grp profile pic

ப்ரோபைல் போட்டோ க்ரூப் சாட் – க்ரூப் சாட்களுக்குள் க்ரூப் பயனர்களுக்காக வாட்ஸ்அப் ப்ரோபைல் படத்தை வெளியிடுகிறது. இந்த வசதியை செயல்படுத்த முதலில் க்ரூப் ஒன்றை உருவாக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது ஒரே பெயரில் க்ரூப்-இல் உள்ளவர்கள் மற்றவர்களை ப்ரோபைல் போட்டோவை வைத்து எளிதில் கண்டறிந்து விட முடியும்.

ஒருவேளை யாரேனும் ப்ரோபைல் போட்டோ வைக்காமல் இருந்தாலோ அல்லது பிரைவசி செட்டிங்கில் அதனை மறைத்து வைத்தாலோ, போட்டோ இல்லாமல் காலியாக உள்ள படம் செட் செய்யப்படும். இதில் குறிப்பிட்ட காண்டாக்டின் முதல் எழுத்து ப்ரோபைல் போட்டோவாக வைக்கப்படும்.

தற்போது மெசேஜ் யுவர்செல்ஃப் மற்றும் ப்ரோபைல் போட்டோ க்ரூப் சாட் அம்சங்கள் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.22.24.2 வெர்ஷனிலும் வாட்ஸ்அப் ஐஒஎஸ் பீட்டா 22.23.0.70 வெர்ஷனிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. தொடர் சோதனைக்கு பின் இரு அம்சங்களும் அனைவரும் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும்.

#technology

Exit mobile version