வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் புதிய வசதி அறிமுகம்

500x300 1723690 1716447 newproject 2022 06 21t154144860

சமூக வலைதளமான வாட்ஸ்அப்பை மெட்டா நிறுவனம் வாங்கிய பின்னர், பல்வேறு சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது. பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் பல்வேறு அப்டேட்டுகளை தொடர்ந்து வழங்கி வரும் அந்நிறுவனம் தற்போது மேலும் ஒரு முக்கிய அம்சத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸில் தான் இந்த புதிய அப்டேட் வர உள்ளது. அதன்படி தற்போது வீடியோ மற்றும் போட்டோக்களை மட்டுமே வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக வைக்க முடியும், விரைவில் வாய்ஸ் நோட்களையும் ஸ்டேட்டஸாக வைக்கும் அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

குரலை பதிவு செய்து வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் அம்சம் ஏற்கனவே வாட்ஸ் அப்பில் நடைமுறையில் இருக்கும் நிலையில், தற்போது ஸ்டேட்டஸிலும் அந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தற்போது இந்த அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் சோதனை செய்து வருவதாகவும், விரைவில் இது பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#technology

Exit mobile version