Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

Share

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், பயனர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த ‘மின்னஞ்சல் முகவரியை மாற்றும்’ (Change Gmail Address) புதிய வசதியை கூகுள் நிறுவனம் இன்று (ஏப்ரல் 01, 2026) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், 2004-ஆம் ஆண்டு காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட பழைய அல்லது தர்மசங்கடமான பெயர்களைக் கொண்ட மின்னஞ்சல் முகவரிகளைப் பயனர்கள் இனி எளிதாக மாற்றிக்கொள்ள முடியும்.

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை இது குறித்துத் தனது ‘X’ (முன்னர் ட்விட்டர்) தளத்தில் பதிவிடுகையில், “2004-ஆம் ஆண்டு ஒரு சிறந்த ஆண்டாக இருந்திருக்கலாம், ஆனால் உங்கள் Gmail முகவரி இன்னும் அதே காலத்திலேயே சிக்கியிருக்க வேண்டிய அவசியமில்லை” எனக் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். பயனர்கள் தங்களது தற்போதைய கூகுள் கணக்கை (Google Account), தரவுகள் அல்லது சந்தாக்களை (Subscriptions) மாற்றாமலேயே புதியதொரு முகவரியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

முகவரியை மாற்றுவது எப்படி?
பயனர்கள் தங்களது Gmail அல்லது கூகுள் கணக்கின் ‘Settings’ பக்கத்திற்குச் சென்று, அங்கு கிடைக்கும் (Available) புதிய முகவரியைத் தேர்வு செய்து மாற்றிக்கொள்ளலாம். தற்போது இந்த வசதி முதற்கட்டமாகக் குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் உலகளாவிய ரீதியில் அனைவருக்கும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய முகவரிக்கு என்ன நடக்கும்?

உங்கள் பழைய முகவரி தொடர்ந்து உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்டே இருக்கும். எனவே, வேறு எவராலும் அந்தப் பெயரைப் பயன்படுத்த முடியாது.

பழைய முகவரிக்கு யாராவது மின்னஞ்சல் அனுப்பினாலும், அது தானாகவே உங்கள் புதிய முகவரியின் Inbox-க்கு வந்து சேரும்.

ஒரே கணக்கில் இரண்டு முகவரிகளையும் பயன்படுத்தி நீங்கள் ‘Sign-in’ செய்துகொள்ள முடியும்.

புதிய ‘AI Inbox’ அம்சம்:
இதேவேளை, மின்னஞ்சல் முகவரி மாற்றத்துடன் “AI Inbox” என்ற புதிய புரட்சிகரமான அம்சத்தையும் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி மின்னஞ்சல்களைத் தானாகவே தரம் பிரிப்பதுடன், முக்கியமான செய்திகளுக்குப் பதிலளிப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கும். இந்த ‘AI Inbox’ வசதி தற்போது அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் பரீட்சார்த்தமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...

puthiyathalaimurai 2025 09 11 vyw9mwvj 3
சுகாதாரம்கட்டுரை

2050-க்குள் புற்றுநோய் பாதிப்பு 50% உயரும்: கூல் லிப் குறித்து அடையாறு புற்றுநோய் மையம் கடும் எச்சரிக்கை!

ஒருவர் எவ்வளவு காலம் வாழ்வார் என்பதை உணவுப் பழக்கம் அல்லது உடற்பயிற்சி மட்டுமே தீர்மானிப்பதில்லை. அதில்...

til february 2026 being a perfect month is a rare occurence v0
கட்டுரைவரலாறு

2026 பெப்ரவரி: நாட்காட்டியில் ஒரு முழுமையான மாதம்! – 11 ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்துள்ள அரிய நிகழ்வு.

தற்போது பிறந்துள்ள 2026 பெப்ரவரி மாதம், நாட்காட்டி அமைப்பில் மிகவும் அரிதான மற்றும் நேர்த்தியான ஒரு...