meta
தொழில்நுட்பம்

டுவிட்டர் வரிசையில் இணைந்தன ஃபேஸ்புக், இன்ஸ்டா- கட்டண முறை அறிவிப்பு

Share

டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் டுவிட்டர் புளூ சந்தா முறையை அறிவித்தது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. புதிய டுவிட்டர் புளூ சந்தாவில் வெரிஃபிகேஷன் புளூ டிக் மற்றும் தேடல்களில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதுதவிர ஏராளமான சேவைகள் டுவிட்டர் புளூ சந்தாவின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வரிசையில், தற்போது இன்ஸ்டாகிராம் இணைந்து இருக்கிறது. இன்ஸ்டாவின் தாய் நிறுவனமான மெட்டா புதிய கட்டண முறையை அறிவித்து இருக்கிறது. இந்த சந்தா மெட்டா வெரிஃபைடு என அழைக்கப்படுகிறது.

புதிய மெட்டா வெரிஃபைடு மூலம், மெட்டா நிறுவனம் போலி அக்கவுண்ட்கள் மற்றும் ஆள்மாறாட்டத்தை குறைக்க செய்வது மற்றும் இதர பலன்களை வழங்குகிறது.

மெட்டா தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூக்கர்பர்க் இன்ஸ்டாகிராம் கட்டண முறையை அறிவித்தது. மெட்டா வெரிஃபைடு கட்டண முறை வலைத்தளத்திற்கு மாதம் 11.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 990 என்றும் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு வலைத்தளங்களில் மாதம் 14.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,240 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய கட்டண முறையின் கீழ் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டிற்கு வெரிஃபைடு டிக் வழங்கப்படுகிறது. புதிய முறை மெட்டா சேவைகளின் கீழ் தனித்துவம் மற்றும் செக்யுரிட்டியை வழங்கும் என மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார்.

முதற்கட்டமாக மெட்டா வெரிஃபைடு சேவை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இந்த வாரம் வழங்கப்படுகிறது. இதை் தொடர்ந்து விரைவில் மற்ற நாடுகளில் மெட்டா வெரிஃபைடு சேவை வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறது.

மெட்டா வெரிஃபைடு சந்தாதாரர்களுக்கு வெரிஃபைடு பேட்ஜ், கூடுதல் செக்யுரிட்டி மற்றும் நேரடி வாடிக்கையாளர் சேவை மைய வசதி வழங்கப்படும் என மெட்டா தெரிவித்து இருக்கிறது.

#technology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...

whatsapp 2025 09 03 13 23 26
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் பயனர்களே எச்சரிக்கை: உங்கள் கணக்கை முடக்கும் ‘கோஸ்ட் பேரிங்’ தாக்குதல்!

வாட்ஸ்அப் (WhatsApp Web) பயன்படுத்துபவர்களின் கணக்குகளை இணையக் குற்றவாளிகள் மிக எளிதாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...

24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...