டுவிட்டர் லோகோவை திடீரென மாற்றிய எலான் மஸ்க்!

download 38 1

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை விலைக்கு வாங்கினார்.

அதனை தொடர்ந்து டுவிட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் டுவிட்டர் செயலியின் லோகோவை எலான் மஸ்க் திடீரென மாற்றம் செய்துள்ளார்.

“நீல நிற குருவிக்கு பதில் நாய்” லோகோவாக மாற்றப்பட்டுள்ளது. ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் லோகோ வைக்கப்பட்டுள்ளது. Dogecoin எனப்படும் கிரிப்டோகரன்சியின் அடையாளமாக இந்த நாயின் உருவப்படம் உள்ளது.

டுவிட்டர் லோகோவை மாற்றி எலான் மஸ்க் மீம்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

டுவிட்டர் செயலியின் லோகோ திடீரென மாற்றம் செய்யப்பட்டிருப்பது பயனாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#world

Exit mobile version