அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA) கடந்த ஆண்டு, பிரபஞ்சம் ரகசியங்களை அறிவதற்கான முயற்சியாக, சுமார் 80,000 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை கடந்தாண்டு டிசம்பரில் விண்வெளிக்கு அனுப்பியது.
இதனிடையே ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமியில் இருந்து சுமார் 10 லட்சம் மைல்கள் தொலைவில் வெற்றிகரமாக கடந்த ஜனவரியில் நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட துல்லியமான முதல் வண்ண புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டார்.
சுமார் 13 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் நடைபெறும் நிகழ்வை இந்த தொலைநோக்கி மூலம் துல்லியமாக காட்சிப்படுத்தப்படுத்தி உள்ளதாகவும் நாசா தெரிவித்திருந்தது. உலகம் முழுவதும் இந்த புகைப்படங்கள் குறித்து பல்வேறு வானியல் வல்லுனர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், நாசாவின் முதல் வண்ண புகைப்படத்தை பங்கமாய் கலாய்த்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில் உள்ள புகைப்படத்தில், சமையல் அறையில் உள்ள மார்பில் கல்லை ஜூம் செய்து பார்த்தால் நாசா வெளியிட்ட பிரபஞ்சத்தின் புகைப்படம் போல் உள்ளதாகவும், “சிறப்பான முயற்சி நாசா” எனவும் எழுதப்பட்டுள்ளது. நாசாவை கலாய்த்து பதிவிட்டுள்ள எலான் மஸ்கின் டிவீட் தற்போது டிரெண்டாகி வருகிறது.
#technology
Leave a comment