புளூ டிக் வெரிபிகேஷன் சந்தா – அறிமுகப்படுத்தியது டுவிட்டர்

1784427 twitter1

டுவிட்டர் மற்றும் எலான் மஸ்க் இடையே நிறுவனத்தை விலைக்கு வாங்கும் பரிவர்த்தனை சமீபத்தில் நிறைவு பெற்றது. டுவிட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 54.20 டாலர்கள் வீதம் மொத்தம் 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி இருக்கிறார்.

டுவிட்டரை கைப்பற்றியதும் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைமை நிதி அலுவலர் ஆகியோரை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்தார். டுவிட்டர் நிறுவனம் வெரிபிகேஷனை பயன்படுத்த ஒவ்வொரு மாதமும் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டது.

வெரிபிகேஷன் சேவையையும் கொண்டுவந்த டுவிட்டர் புளூ டிக் சந்தாவுக்கான மாதாந்திர கட்டணம் 8 டாலர்கள் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்நிலையில், டுவிட்டர் நிறுவனம் ஒரு மாதத்திற்கு 8 டாலருக்கான சந்தா சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதில் புதிய உரிமையாளர் எலான் மஸ்க் இயங்குதளத்தின் சரிபார்ப்பு முறையை மாற்றியமைத்ததால் சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு இப்போது புளூ டிக் மார்க் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐஒஎஸ் சாதனங்களுக்கான புதுப்பிப்பில், இப்போது பதிவுபெறும் பயனர்கள், நீங்கள் ஏற்கனவே பின்தொடரும் பிரபலங்கள், நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகளைப் போலவே, அவர்களின் பெயர்களுக்கு அடுத்ததாக புளூ டிக் சரிபார்ப்பு அடையாளத்தைப் பெறலாம் என தெரிவித்துள்ளது.

#technology

 

Exit mobile version