twitter
உலகம்செய்திகள்தொழில்நுட்பம்

டுவிட்டர் அலுவலகத்தில் படுக்கைகள் -சமூக வலைதளத்தில் வைரல்

Share

டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய தொழில் அதிபர் எலான் மஸ்க், அதில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக நிறுவன ஊழியர்கள் பலரும் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இதை தொடர்ந்து டுவிட்டரில் புளு டிக்கிற்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. நிறுவனத்தில் அடுத்தடுத்து நடந்த மாற்றங்கள் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் எலான் மஸ்க் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள டுவிட்டர் தலைமை அலுவலகத்தில் தற்போது பல புதிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.

இதில் நிறுவனத்தில் இருந்த சோபாக்கள், நவீன இருக்கைகள் போன்றவற்றை அவர் படுக்கைகளாக மாற்றி உள்ளார். இரட்டை சோபாக்கள் ஒற்றை படுக்கையாக மாறி உள்ளது.

அவையும் நவீன வடிவமைப்பில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மாற்றங்கள் மற்றும் இருக்கைகள் படுக்கையான படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கடும் பணி செய்யும் ஊழியர்கள் சிறிது நேரம் ஓய்வெடுக்க இந்த வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த படங்கள் வைரலானதை தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோ நகர அதிகாரிகள் வணிக ரீதியாக பதிவு செய்யப்பட்ட கட்டிடத்தில் ஓய்வறைகள் கட்டியது ஏன்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...