போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்!

ZmRQ8VlGcZBHyBWz0q7N 1 1

போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்!

போலியான முகநூல் கணக்குகள் தொடர்பில் கணனி குற்ற விசாரணைப் பிரிவின் சமூக ஊடக குற்ற விசாரணை பகுதி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சிறுமிகள் மற்றும் பெண்களின் புகைப்படங்களை முகநூலில் ஆபாசமாக பதிவிடும் நபர்கள் மற்றும் முகநூல் பக்க அட்மின்கள் என்போர் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

சிறுமிகள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பல முகநூல் பக்கங்கள் இயங்கி வருவதாக குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு போலி முகநூல் கணக்குகளின் ஊடாக குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என சமூக ஊடக குற்ற விசாரணைப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் பி.ஐ.வீ கயசிறி தெரிவித்துள்ளார்.

#Technology

Exit mobile version