கட்டுரை

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

Published

on

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய உரை வடிவமைப்பு விருப்பங்களைச் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, பயனர்கள் இந்த செயலியின் மூலமாக மிகவும் சிறப்பான முறையில் உரையாடல்களை மேற்கொள்ளக்கூடிய வகையில் பல புதிய உரை வடிவமைப்பு விருப்பங்கள் வட்ஸ்அப் இல் சேர்க்கப்பட்டுள்ளன.

வட்ஸ்அப் பயனர்கள் இப்போது புல்லட் மற்றும் எண்ணிடப்பட்ட பட்டியல்கள், பிளாக் (மேற்கோள்கள்) மற்றும் இன்லைன் குறியீட்டைப் பயன்படுத்தி தங்கள் செய்திகளை முன்னிலைப்படுத்தவும் ஒழுங்கமைக்கவும் முடியும்.

இது பெரிய அளவிலான உரைகளை எளிதாகப் படிக்க உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய வடிவமைத்தல் விருப்பங்கள் சிறிது காலமாகவே உருவாக்கப்பட்டு வருவதாகவும், ஆனால் இப்போது அவை சனல்களுக்கான ஆதரவுடன் Android, iOS, Web மற்றும் Mac க்கான வட்ஸ்அப் இல் கிடைக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய அமைப்புகளானது, அனைத்து வட்ஸ்அப் பயனர்களுக்கும் ஏற்கனவே கிடைத்த தடிமனான (Bold), சாய்வு (Italic), ஸ்ட்ரைக்த்ரூ (strikethrough) மற்றும் மோனோஸ்பேஸ் (monospace) வடிவங்களில் அவை இணைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version