தொழில்நுட்பம்
கூகிள் நிறுவனத்தின் satellite messaging சேவை…!!!
கூகிள் நிறுவனத்தின் satellite messaging சேவை…!!!
கூகிள் நிறுவனமானது செய்மதி தொடர்பாடல் சேவையினை வழங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. இந்த மாதம் கூகிள் நிறுவனத்தின் தொலைபேசியான Google Pixel 8 வெளியிட இருக்கும் நிலையில் இந்த செய்தி கூகிள் நிறுவன பயனர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்பிள் நிறுவனத்தின் Emergency SOS செய்மதி தொடர்பாடல் சேவையினை போன்று கூகிள் நிறுவனமும் வழங்க இருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக Garmin என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவையினை கூகிள் இருப்பதாக அறியமுடிகின்றது. Garmin என்ற நிறுவனம் GPS navigation, satellite phones தயாரிக்கும் நிறுவனமாகும். இவர்கள் Iridium எனும் செய்மதியினை வைத்து இருக்கும் நிறுவனமாகும். இவர்களுடன் கூகிள் நிறுவனம் இணைவதன் மூலம் 150 இற்கு மேற்பட்ட நாடுகளுக்கு இந்த செய்மதி தொடர்பாடல் வசதியினை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இந்த சேவையினை கட்டணம் செலுத்திப்பெற்றக்கொள்ள வேண்டியதாக இருக்கும். உங்களுக்கு தேவைப்பட்டால் பணம் செலுத்திப்பெற்றுக்கொள்ள முடியும். Motorola நிறுவனமும் புதிய key chain போன்ற ஒரு gadget இனை சந்தைக்கு அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.