தொழில்நுட்பம்

WhatsApp வெளியிட்ட புதிய Update…!!!

IMG 8361
Share

 WhatsApp வெளியிட்ட புதிய Update…!!!

அதிகளவான பயனர்கள் விரும்பிப்பயன்படுத்தும் சமூக வலைத்தளமான WhatsApp செயலியானது புதிய அம்சங்களை, வசதிகளை அப்பப்போது வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது.

இதுவரை காலமும் WhatsApp பயன்படுத்தும் அனைத்து பயனர்களின் முறைப்பாடாக இருந்தது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அனுப்பும் போது அவற்றின் தரத்தை மிகவும் உடைத்து மோசமான நிலையில் அனுப்பும் என்பதாகும். இதனால் பெரும்பாலான பயனர்கள் WhatsApp இனை முதற்தர செயலியாக பயன்படுத்தினாலும் புகைப்படங்களை நெருக்கமின்றி உயர் தரத்துடன் அனுப்புவதற்கு Telegram இனைப்பயன்படுத்துவார்கள். இந்த பிரச்சனை நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. இதனை சரிசெய்து பொருட்டு WhatsApp நிறுவனத்திடம் இருந்து புதிய update ஒன்று வெளிவிடப்பட்டுள்ளது.

இனி WhatsApp இல் புகைப்படங்களை உயர் தரத்துடன் அனுப்பலாம்.

WhatsApp செயலின் புதிய update இல் புகைப்படங்களை உயர்தரத்துடன் அனுப்புவதற்கான புதிய அம்சத்தை கடந்தவாரம் வெளியிட்டதுடன் உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து பயனாளர்களுக்கும் இந்தவசதியினை வெளியிட்டிருக்கின்றது.

இந்த புதிய அம்சம் மூலமாக உயர்தரத்துடன் புகைப்படங்களை அனுப்ப முடிந்தாலும் புகைப்படங்களின் உண்மையான தரத்துடன் அனுப்ப முடியாது என்பது கவலையான விடயமாகும் இருப்பினும் பழையதுடன் ஒப்பிடும் போது நிறைய வித்தியாசம் இருக்கின்றமை குறிப்படத்தக்கது. இதுபோன்று வீடியோவிற்கும் ஒரு புதிய Update வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நீங்கள் WhatsApp இனை பயன்படுத்துபவராக இருந்தால் WhatsApp செயலியினை update செய்த பின்னர் முயற்சி செய்து பாருங்கள்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த...